என்னப்பா இந்த படத்துக்கு இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க!.. ரஜினியே ஷாக்கான சம்பவம்..

இந்திய சினிமாவின் சிறந்த அடையாளங்களில் ஒருவர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் இன்றும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெய்லர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வாணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து ஜெய் பீம் வெற்றி பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார்.

இப்படமும் பான் இந்திய அளவில் உருவாகி வருகிறது. தற்காலிகமாக இப்படத்திற்கு தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று இளம் தலைமுறையினரின் மிகுந்த விருப்பத்திற்குரிய இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படமும் முழு நீள ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் நண்பரான எடிட்டர் மோகன் ரஜினியை பற்றி தகவல் ஒன்றை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

எடிட்டர் மோகன் திரைப்பட எடிட்டர் மட்டுமின்றி எழுத்தாளர்,தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது மகன்கள் தான் இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர். இன்று இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவையே கலக்கி வந்தாலும் ஆரம்பத்தில் ரீமேக் படங்களை மட்டுமே உருவாக்கி வந்தனர். மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் தான் ஜெயம்.

இப்படம் இதே தலைப்பில் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்தது. தமிழில் ரவி,சதா,கோபிசந்த் ஆகியோர் நடித்திருப்பர். இப்படத்தை எடிட்டர் மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எம்எல் மூவி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும். முதலில் ஜெயம் திரைப்படம் முழுவதுமாக தயாரான பிறகு இதை பார்ப்பதற்காக எடிட்டர் மோகன் சென்றுள்ளார். இதை எப்படியோ கேட்டறிந்த ரஜினிகாந்த் நானும் அந்த படத்தை பார்க்க வருவதாக மோகனிடம் தெரிவித்திருக்கிறார். மோகனும் மறுப்பு தெரிவிக்காமல் வர சொல்லி இருக்கிறார்.

ஆனால் மறுநாள் காலையில் ரஜினி மட்டும் இன்றி அவரது மனைவி மற்றும் இரு மகள்களையும் அழைத்து வந்துள்ளார். பின்னர் படத்தை பார்த்தார் சிறிது நேரம் கழித்து இடைவேளை விடப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் வெளியே வந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். பின்னர் புகை பிடித்து முடித்த பிறகு நேராக எடிட்டர் மோகனிடம் வந்து ”என்ன சார் இப்படி பண்ணி வச்சிருக்கீங்க ஒரு புதுமுக ஹீரோக்கு இவ்வளவு செலவு பண்ணி வச்சிருக்கீங்களே” என்று கேட்டுள்ளார்.

அதற்கு எடிட்டர் மோகன் சார் ”இது நீங்கள் நினைக்கிற மாதிரி புது ஹீரோ இல்ல சார் என் இரண்டு மகன்களின் லைஃப் சார். அதில் இயக்குனர் ராஜா என்னுடைய மூத்த மகன் என்றும் அதில் ஹீரோவாக நடித்த ரவி எனது இரண்டாவது மகன் என்றும் ரஜினியிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு படம் வெளிவந்து இரண்டு பேருக்கும் லைஃப் கொடுத்தது என்றே சொல்லலாம். படம் வெற்றி பெற்றதால் படத்தின் ஹீரோ ரவி பெயர் ஜெயம் ரவி என்று மக்களிடையே பிரபலமடைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.