பாட்ஷா படத்தைப் பார்த்து நம்பிக்கை இல்லாமல் பேசிய ரஜினி.. இசையால் உயிர் கொடுத்து மாஸ் காட்டிய தேவா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வரலாற்றை பாட்ஷாவிற்கு முன் பாட்ஷா படத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அதுவரை அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த ரஜினி பாட்ஷா படத்தின் இமாலய வெற்றியால் தன்னை கலெக்ஷன் கிங் ஆக பாக்ஸ் ஆபிஸில் நிலை நிறுத்தினார். ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தினைப் பார்த்து திருப்தி அடையாத ரஜினி பின் தேவாவின் இசையால்  படத்திற்கு புத்துயிர் கிடைத்ததை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருக்கிறார்.

இதுபற்றி தேவாவிற்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி, “நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் அண்ணாமலை வெற்றிக்குப் பின் மீண்டும் இணைந்து வீரா என்ற காமெடிப் படத்தில் இணைந்தோம். பின்னர் மீண்டும் பாட்ஷா படத்தில் இருவரும் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் அலுவலகத்தில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்ட போது தேவாதான் இந்தப் படத்திற்கு மியூசிக் என அறிந்தேன். ஏனெனில் அண்ணாமலை என்ற வெற்றிக்கு தேவாவின் இசை பெரிதும் கை கொடுத்தது.

இவ்வாறு படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து பின்னணி இசைக்காக தேவாவிடம் வந்தது. அதற்கு முன் படத்தைப் பார்த்த எனக்கு பாட்ஷா திருப்தி இல்லாமல் இருந்தது. எனெனில் சரியா ஒட்டாத காட்சிகள், பிளாஷ்பேக்குள் ஒரு பிளாஷ்பேக் என கதை நீண்டது. எனவே இந்தப் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.  ஆனால் தேவாவிடம் படம் வந்த போது அவர் பின்னணி இசை முடித்து வைத்திருந்தார்.

துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த எம்.ஆர்.ராதா.. யாரைச் சுட வேண்டும் என்று தெரியுமா? நிச்சயமாக எம்.ஜி.ஆரை அல்ல..

அப்போது அவரிடம் படம் பற்றிக் கேட்டேன். என்ன தேவா சார் படம் அண்ணாமலை போல் ஹிட் ஆகுமா என்று, அப்போது தேவா, “என்ன சார்..! இப்படிக் கேட்டுட்டீங்க பாட்ஷா பத்து அண்ணாமலைக்குச் சமம் சார்“ என்று உணர்ச்சியோடு கூறினார். அதன்பிறகே நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு தனது இசையால் பாட்ஷா படத்தை வேற லெவலில் கொண்டு சேர்த்திருந்தார் தேவா.. “ என்று கூறினார் ரஜினி.

பாட்ஷா படத்தின் திம் மியூசிக்கை கேட்டாலே இன்று வரை நமக்குள் இனம் புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டு புல்லரிக்க வைத்து விடும். டிவியில் எத்தனை முறை பாட்ஷா படத்தைப் போட்டாலும் இன்றும் புதிதாகப் பார்ப்பதுபோல் படத்தைப் பார்ப்போம். படத்தின் இமாலய வெற்றிக்கு தேவாவின் இசை பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews