5 முன்னணி நடிகர்களுக்கு வெள்ளிவிழாப் படங்கள் கொடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

80ஸ், 90ஸ் குட்டீஸ்களுக்கு இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரது படங்கள் என்றாலே ஹிட் தான். 12 படங்களை இயக்கிய இவருக்கு 8 படங்கள் ஹிட். அதிலும் 5 முன்னணி நடிகர்களுக்கு வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர்.

பிரபுவை வைத்து அதிகமான படங்களை இயக்கியுள்ளார். இவரது படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவரது இயக்கத்தில் எல்லா படங்களும் ரசிகர்களுக்கு திரை விருந்தாகத்தான் இருந்தன.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 5 முன்னணி நடிகர்களுக்கு வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். இவர் இயக்கிய படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

1988ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் தான் உரிமை கீதம். பிரபு, கார்த்திக், ரஞ்சனி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு வெற்றிப்படம்.

PV
PV

1988ல் வெளியான படம் புதியவானம். சத்யராஜ், சிவாஜிகணேசன் காம்பினேஷனில் வெளிவந்த படம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 1990ல் வெளியான படம் உறுதிமொழி. பிரபுவுக்கு நல்ல ஹிட் கொடுத்த படம்.

1990ல் கிழக்குவாசல் வந்தது. கார்த்திக், ரேவதி நடித்துள்ளனர். மெகா ஹிட் படம். 150 நாள்களைக் கடந்து ஓடியது.

1992ல் சிங்கார வேலன் படம் வந்தது. கமல், குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். கமலுக்கு இது மிகப்பெரிய ஹிட் கொடுத்து வெள்ளிவிழா கண்டது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.

1992ல் வெளிவந்த சின்னக்கவுண்டர் செம மாஸ். விஜயகாந்த்தை முற்றிலும் மாறுபட்ட கிராமிய நாயகனாக நடித்த படம் விஜயகாந்த் கேரியரிலேயே 255 நாள்களைக் கடந்த ஒடி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

Ponnumani
Ponnumani

1993ல் வெளிவந்த பொன்னுமணி படம் மிகப்பெரிய ஹிட். கார்த்திக், சௌந்தர்யா நடித்து அசத்தினர். பாடல்கள், காமெடி சூப்பராக இருந்தது. 1993ல் வெளிவந்த படம் எஜமான். ரஜினி, மீனா, கவுண்டமணி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வெள்ளிவிழா கண்டது. மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம்.

1994ல் பிரபுவை வைத்து ராஜகுமாரன் படத்தை எடுத்தார். மீனா, நதியா என இரு நாயகிகள். படம் பட்டையைக் கிளப்பியது. அடுத்து கார்த்திக்கின் நந்தவனத்தேரு இந்தப் படம் சுமாராகப் போனது. அடுத்து வந்தது கற்க கசடற இதுவும் சுமாராகத் தான் போனது.

விஜயகாந்த், ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் என 5 பேருக்குமே வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தவர் தான் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்.
சபாஷ், சேரல் இரும்பொறையின் தமிழ் காதல் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். ஆனால் அவை தோல்வியைத் தழுவின என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...