புண்ணியம் தரும் சித்ர குப்தன் ஸ்லோகம்…

இந்துக்கள் பண்டிகை அனைத்தும் பௌர்ணமி தினத்தில் அமையும். அதிலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு கூடுதல் சிறப்பு. இந்நாளில் இறைவழிபாடும், தானம் செய்வதும் கூடுதல் பலன் தரும். இன்றைய தினம் கீழ்க்காணும் மந்திரத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி வந்தால் நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, நன்மக்கள் செல்வம், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிட்டி, இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள் என்பது இறை நம்பிக்கை…

ஓம் கமலவர்ணனே போற்றி!

ஓம் சித்திரை உருவே போற்றி!

ஓம் பயம் போக்குபவனே போற்றி!

ஓம் கால உருவே போற்றி !

ஓம் அந்தக நண்பனே போற்றி!

ஓம் ஞான உருவே போற்றி!

ஓம் கருணாகரனே போற்றி!

ஓம் கணக்கனே போற்றி!

ஓம் தர்மராஜனே போற்றி!

ஓம் தேவலோக வாசனே போற்றி!

ஓம் ஆயுள் காரணனே போற்றி!

ஓம் மேன்மை தருபவனே போற்றி!

ஓம் குழந்தை வடிவினனே போற்றி!

ஓம் குளிகன் உருவினனே போற்றி!

ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி!

ஓம் சித்திரகுப்தனே போற்றி!

இந்த ஸ்லோகத்தை சித்ரா பௌர்ணமியான இன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் நற்பலன் கிட்டும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.