இந்தியா

எங்களால முடியாது.. ஸ்ட்ரிக்ட்டா சொன்ன நிர்வாகம்.. கும்பலா கல்லூரி மாணவர்கள் செஞ்ச அலப்பறை..

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இன்று மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருவதால் இந்த உலகத்தில் எந்த மூலையில் என்ன விஷயங்கள் நடந்தாலும் அது மிகப்பெரிய அளவில் வைரலாகி பேசு பொருளாகவும் மாறும். அதிலும் குறிப்பாக வழக்கமான செய்திகளை இணையவாசிகள் எளிதாக கடந்து சென்றாலும் வினோதமான அல்லது விசித்திரமான விஷயங்கள் இருந்தால் நிச்சயம் அதனை அவர்கள் கடந்து போகாமல் அதன் பின்னணி என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவலிலும் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.

அப்படி இருக்கையில் சமீபத்தில் பஞ்சாப்பில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்கள் இணைந்து நடத்திய வினோத போராட்டம் தொடர்பான செய்தியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் காலம் என்பது வருங்காலத்தை தீர்மானிக்கும் பொருட்டு அனைவரையும் ஒரு வழியை நோக்கி செல்ல தீர்மானிக்கும் ஒரு முக்கியமான கட்டமாகும். இதில் பல சோகங்கள், சந்தோசம், சிரிப்பு என ஏராளமான விஷயங்கள் நடந்ததிருக்கும். அப்படிப்பட்ட இந்த கல்லூரி வாழ்க்கையில் பஞ்சாப் மாணவர்கள் செய்த அலப்பறை ஒன்றை தற்போது பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் பகுதியில் அமைந்துள்ளது ஐஐஎம் மல்லுரி. இங்குள்ள மாணவர்கள் தான் ஒரு முக்கியமான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தற்போது அப்பகுதியில் வெயில் வாட்டி வதைத்து கொண்டிருப்பதால் பொதுவெளியில் செல்லவே மக்கள் அஞ்சி வருகிறார்கள். இதற்கு மத்தியில் ஐஐஎம் கல்லூரியில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களின் அறையிலும் ஏசி இல்லாததால் தங்களின் நேரத்தை அங்கே கழிக்கவும் அவர்கள் பெரும்பாடு பட்டு வருகின்றனர்.

இதனால் கல்லூரி நிர்வாகத்திடம் தங்களின் விடுதியில் ஏசி வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஒரு அளவுக்கு பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள், அதன் பின்னர் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல் அதிரடித் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளனர்.

அவர்களின் விடுதியில் ஏசி இருக்கும் அரிதான ஒரு இடம்தான் கல்லூரி கேன்டீன். இதனால் விடுதி மாணவர்கள் அனைவருமே அந்த ஏசி இருக்கும் கேண்டீனில் சென்று உறங்கிக் கொண்டு ஒரு நூதன போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளனர். இப்படி ஒரே இடத்தில் அனைவரும் ஒன்றாக தூங்குவதால் நிச்சயம் இதனை கல்லூரி நிர்வாகம் கவனித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற பொருட்டில் தான் மாணவர்கள் இதனை செய்துள்ளனர்.

இதனிடையே, பஞ்சாப் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியிலும் லைக்குகளை அள்ளி வருகிறது.

Published by
Ajith V

Recent Posts