சான்ஸ் கேட்ட கண்ணதாசனை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. பின்னாளில் அவர் படத்துக்கே சோபாவில் அமர்ந்து பாட்டெழுதிய கவிஞர்!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரியார் திராவிட கழகத்தின் மூத்த தலைவராகவும் தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாகவும் பணியாற்றியவர் தான் திருவாரூர் தங்கராசு. நடிகவேள் எம் ஆர் ராதாவை புகழுன் உச்சிக்கே கொண்டு சென்ற ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் இவர் எழுதியது தான். இப்படி பல திரைப்படங்களில் தனது தனித்திறனை காட்டிய திருவாரூர் தங்கராசுக்கு நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் ‘பராசக்தி’ படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு திட்டியிருக்கிறது.

அதன்படி படம் ஆரம்பிக்கும் தருவாயில் இந்த படத்திற்கான வசனம் எழுதும் பணிகளில் மும்முறமாக ஈடுபட்டிருந்தார் தங்கராசு. அப்போது இயக்குனர் பஞ்சு இவரின் வசனங்களை படித்துப் பார்த்து சில ஆங்கில படங்களில் வருவது போன்ற வசனங்களை உதாரணமாக கொடுத்து அதன்படி எழுதுமாறு கேட்டு இருக்கிறார். இதேநிலை தொடர்ந்து வர கோபமுற்ற தங்கராசு, ”இந்த படத்துக்கு ஆங்கில படங்களையே கதை வசனமாக வைத்தால் அப்புறம் எதற்கு நான்” என்று நீங்கள் வேறு யாராவது வைத்து எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் கலைஞர் கருணாநிதி பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுத ஆரம்பித்தார்.

ஆனால் இயக்குனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட திருவாரூர் தங்கராசு தயாரிப்பாளர் பெருமாள் முதலியாருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். எனவே அவர் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஒரு முறை பராசக்தி படத்திற்கான பாடல் பதிவு பற்றி ஒரு பேச்சு எழுந்தது. அப்பொழுது கவிஞர்கண்ணதாசன் இந்த படத்திற்கு நானும் பாட்டு எழுதவா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பெருமாள் முதலியார் ”பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபமுன்னு நினைச்சீங்களா?” என்று படார் என கூறியிருக்கிறார்.

இதனால் கண்ணதாசனின் முகம் மாறி இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு இருவருமே அதனைப் பற்றி பேசவில்லை. பெருமாள் முதலியாரும் பாட்டு தருகிறேன் என்றோ தரவில்லை என்றோ எதுவுமே கூறாமல் இருந்திருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு கவிஞர் கண்ணதாசன் இன்னும் கடுமையாக உழைக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதன் பிறகு பல காவியப் பாடல்கள் அவரின் வரிகளில் வந்திருக்கின்றது. பராசக்தி படம் வெளிவந்து பல வருடங்களுக்கு பின்னால் 1972ல் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் மீண்டும் ‘தங்கத்துரை’ என்று ஒரு படம் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாடல் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

சிம்புவோட விரல் வித்தை ஸ்டைலுக்கு காரணமான இயக்குநர்.. பாட்டிலேயே பஞ்ச் தெறிக்க விட்ட வாலி

ஒரு முறை பாடல் எழுதுவதற்காக கவிஞர் வருகிறார் என அலுவலகம் ஒரே பரபரப்பாக இருந்திருக்கிறது. பெருமாள் முதலியாரைப் பார்த்து கவிஞர் கண்ணதாசன், ”தப்பா நினைச்சுக்காதீங்க ஊசி போட்டு இருக்கிறதுனால என்னால தரையிலோ சேரிலோ அமர முடியாது எனக்காக ஒரு சோபா வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். உடனே பெருமாள் முதலியார் ஒரு சோபா ஏற்பாடு செய்யா அதில் கண்ணதாசன் சாய்ந்து கொண்டு பாட்டை எழுதுகிறார்.

அதன் அருகில் எம் எஸ் விஸ்வநாதன் டியூன் போட்டுக் கொண்டிருந்தார். அப்படி கண்ணதாசன் எழுதிய பாடல் தான்

”காலமகள் பாதையிலே போடா கண்ணே போ..
அங்கு காத்திருக்கும் வெற்றி உண்டு போடா கண்ணே போ…
நீலக்கடல் அலைகளைப் போல் போடா கண்ணே போ…
என் நெஞ்சம் உன்னை தொடர்ந்து வரும் போடா கண்ணே போ…”

என்று எந்த தயாரிப்பாளர் அவரைப் பார்த்து பாட்டு எழுதுவது அவ்வளவு என்று சுலபம் நினைச்சீங்களா என்று கேட்டாரோ அதே தயாரிப்பாளர் அலுவலகத்தில் கண்ணதாசன் மெத்தையில் சாய்ந்து கொண்டே பாடல் எழுதினார் . வைராக்கியம் வைத்தவன் கெட்டுப் போனதில்லை என்ற வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்திருக்கிறார் கண்ணதாசன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...