இந்த மாதிரி பூஜை போட்டா குல தெய்வம் மனசு குளிர்ந்து கேட்டதெல்லாம் கொடுக்கும் – குலதெய்வ வழிபாட்டு முறை!

எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும் பரவாயில்லை. குல தெய்வத்தை மட்டும் கண்டிப்பாக வணங்க வேண்டும். நம் குலம் காக்கும் தெய்வமாக குல தெய்வம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் குலதெய்வ வழிபாட்டை பிரதானமாகக் கடைப்பிடித்து வந்தனர்.

காலப்போக்கில் சிலருக்கு குலதெய்வம் எந்த தெய்வமென்றே தெரியாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஆனால் தங்களுக்கு ஏதேனும் தொடர்ச்சியாக பிரச்சினைகள் வரும் போது குலதெய்வத்தை தேடி, நாடிச் செல்கின்றனர்.

சிலருக்கு குலதெய்வக் கோவிலுக்கு அடிக்கடி சென்று வர முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்படி உள்ள குடும்பத்தினர் இந்த முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் நல்ல பலன்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

தலைமுறையை காக்கும் குலதெய்வத்தை மகிழ்விக்க அவரின் அருளை பெற வீட்டில் குலதெய்வ பூஜை வரம் ஒருமுறை செய்து வர வேண்டும். ஐயனார், பெருமாள், பெரியாண்டிச்சி, முனியப்பன், சிவன், இருசாயி, ஒண்டி வீரன், காளி, முருகன் என்று அவரவருக்கென்று குலதெய்வம் இருக்கும். அவரவர் குலதெய்வத்தை பொறுத்து இந்த பூஜையை எந்த நாளில் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதில் ஐயனார், முனியப்பன் என்று காவல் தெய்வங்களை… குலதெய்வமாக கொண்டவர்கள் சனிக்கிழமை அன்று வீட்டில் குலதெய்வ பூஜை செய்ய வேண்டும். மேலும் உங்கள் குலதெய்வம் பெண் கடவுளாக இருந்தால் செவ்வாய்க்கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்வது நல்லது. அதேபோல் முருகன் குலதெய்வமாக இருந்தால்.. குலதெய்வ பூஜையை செவ்வாய்க் கிழமை அன்று செய்ய வேண்டும்.

எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி கடைசி படம் என்ற புரளி.. அள்ளிய கூட்டம்.. வதந்தியால் ஹிட் ஆன தெய்வத்தாய்

பெருமாளை குலதெய்வமாக கொண்டவர்கள் புதன் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும். சிவனை குலதெய்வமாக கொண்டவர்கள் திங்கட் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.

சிலர் சித்தர்களை குலதெய்வமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் வியாழக் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும். முனியாண்டி, முனீஸ்வரன், மதுரை வீரன் உள்ளிட்ட குலதெய்வத்திற்கு ஞாயிற்றுக் கிழமை அன்று குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.

குலதெய்வ பூஜை செய்வது எப்படி?

உங்கள் குலதெய்வ பூஜை செய்ய உகந்த நாளில் ஒரு விளக்கை வாங்கிக் கொள்ளவும். இந்த விளக்கை வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றவும். அதற்கு முன் வெற்றிலை, பாக்கு, பழத்தை குலதெய்வ படங்களுக்கு முன் வைக்கவும். பிறகு பாலில் ஏலக்காய் சேர்த்து காய்ச்சி நெய்வேத்தியமாக படைக்கவும். அடுத்து விளக்கு ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பூஜை செய்யவும். இதை தான் குலதெய்வ பூஜை என்று சொல்வார்கள். இந்த பூஜையை தொடர்ந்து செய்து வந்தால் நம் தலைமுறைக்கு குலதெய்வம் காவலாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews