திருப்பி எடுக்கப்பட்ட வசந்த மாளிகை.. ஹீரோ பெயர் தான் டைட்டில்.. தோல்வி படமான ‘ஆனந்த்’..!

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வசந்த மாளிகை’ என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ஆனந்த். பிரபு நடித்த இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மஜ்னு’ என்ற படத்தின் ரீமேக் என்றாலும் இந்த படத்தின் கதை வசந்த மாளிகை படத்தின் கதைதான் என்பது படம் பார்க்கும்போதே ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.

வசந்த மாளிகை திரைப்படத்தில் காதலன் காதலியை பார்த்து ‘ஏன் இப்படி செய்தாய்’ என்று சந்தேகத்துடன் ஒரு வார்த்தை கேட்பார். அதுதான் காதலர்களின் பிரிவுக்கு காரணமாக அமையும். அதேபோல் ஆனந்த் திரைப்படத்தில் காதலி குறித்து வந்த மொட்டை கடிதத்தை நம்பி காதலன் அவர் மீது சந்தேகப்படுவார். இதுதான் இந்த இரண்டு படத்திற்கு உள்ள ஒற்றுமை.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

vasantha maligai2

அதுமட்டுமின்றி ‘வசந்த மாளிகை’ திரைப்படத்தின் நாயகன், நாயகி பெயர் ஆனந்த் மற்றும் லதா. இந்த படத்திலும் நாயகன், நாயகி பெயர் ஆனந்த், லதா.ஹீரோ கேரக்டரின் பெயரே டைட்டிலாகவும் வைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசன் நடித்த பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய சி.வி.ராஜேந்திரன் என்பவர்தான் இந்த படத்தையும் இயக்கினார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆரிராரோ என்ற பாடலை பாடுவதற்காக மும்பையில் இருந்து லதா மங்கேஷ்கர் வந்திருந்தார். சிவாஜியின் குடும்ப நண்பரான லதா மங்கேஷ்கர், அந்த நட்பின் அடையாளமாக ஒரே ஒரு பாடலை பாட வந்தார்.

latha mangeshkar

இந்த படத்தின் பாடலை பாடுவதற்காக லதா மங்கேஷ்கர்சென்னை வந்த போதுதான் அவரை கமல்ஹாசன் தனது ‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற ‘வலையோசை’ என்ற பாடலுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுவதுண்டு.

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் ஆனந்த் என்று ஒரு பாடகர், அவர் பின்னால் பல பெண்கள் பைத்தியமாக அலைவார்கள். ஆனால் ஒரு ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட் வேலை பார்க்கும் ராதா, ஆனந்தை கண்டு கொள்ளவே மாட்டார். அந்த ஓட்டலில் அனைத்து பெண்களும் ஆனந்த் பின்னால் இருக்கும்போது ஆனந்தை யார் என்று சட்டை செய்யாமல் அந்த ரிசப்ஷனிலேயே இருப்பார், இதை பார்த்த பிறகுதான் ஆனந்த்துக்கு லதா மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும்.

அதன் பிறகு சில மோதல்கள், சில சண்டைகளை அடுத்து இருவருக்கும் காதல் பிறக்கும். இளமை, துள்ளல், கிண்டல், காதல், சீண்டல் என முதல் பாதி ஜாலியாக சென்று கொண்டிருக்கும் போதுதான் திடீரென ஒரு மொட்டை கடிதம் வர தூய்மையான காதலில் ஒரு பிரிவு ஏற்படும். அதன் பிறகு இருவரும் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும்.

anand 1

இந்த படத்தில் சோ.ராமசாமி காமெடி கேரக்டரில் நடித்திருப்பார். அவ்வப்போது அரசியல் வசனத்தையும் பேசி இருப்பார். ‘காதலுக்கு என்ன தடை வந்தாலும் எல்லாவற்றையும் எதிர்த்து ஊழல்போல் ஸ்டெடியாக இருக்க வேண்டும்’ என்று அவர் பேசிய வசனம் அந்த காலத்தில் மிகவும் பிரபலம்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு நல்ல வெற்றி பெற்ற போதிலும் தமிழில் இந்த படம் சுமாரான வசூலையே பெற்றது. பிரபுவிற்கு இது ஒரு தோல்வி படமாகவே அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...