கில்லி ரீ ரிலீஸ் குவித்த வசூல்!.. நேரடியாக விஜய்யை சந்தித்து அப்படியொரு கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்!

விஜய் நடித்த 20 வருஷத்துக்கு முன்னதாக வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கில்லி படத்தை ரிலீஸ் செய்து நல்ல லாபத்தை சந்தித்த நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர்.

சினிமாவை விட்டு விலகாதீங்க விஜய்:

கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இன்னும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

தளபதி வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள நிலையில், சமீபத்தில் ஓட்டுப்போட ரஷ்யாவிலிருந்து உடனடியாக விமானம் மூலமாக சென்னைக்கு வந்து தனது வாக்கினை செலுத்திச் சென்றார்.

அரசியலில் களமிறங்க நடிகர் விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரை எப்படியாவது சினிமாவிலேயே தங்கவைத்து விட வேண்டும் என திரைத் துறையில் இருக்கும் பலர் பல்வேறு வேலைகளை பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

கில்லி விநியோகஸ்தர் கோரிக்கை:

கில்லி படம் வெளியான நிலையில் தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் அந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். புதிய படங்களுக்கு கூட கடந்த நான்கு மாதமாக கொடுக்காத ரெஸ்பான்ஸை கில்லி ரீ ரிலீஸ் படத்துக்கு ரசிகர்கள் கொடுப்பதை பார்த்து அசந்து போன அந்த படத்தின் விநியோகஸ்தர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சினிமாவை விட்டு நிரந்தரமாக விலக வேண்டாம் என்றும் ஆண்டுக்கு ஒரு படமாவது நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக செய்ய வேண்டும் எங்கள் கோரிக்கையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த சக்திவேலன் வைத்துள்ளார். அவருடன் கில்லி படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் உடன் சென்று நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். இன்னமும் நடிகர் விஜய் மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான விசில் போடு பாடல் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...