அவர் இல்லன்னா விஜய் இன்னைக்கு இல்ல..! தளபதியின் தலையெழுத்தை மாற்றிய இயக்குனர்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது வாரிசு திரைப்படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டு வருகிறது. பான் இந்தியா அளவில் உருவாகி வரும் படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இப்படத்திலிருந்து பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தது‌ படக்குழு. இப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கிவிட்டது. மேலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

புகழின் உச்சியில் இருந்தபோது திடீர் திருமணம்.. திரையுலகில் இருந்து காணாமல் போன அமலா..!

Vijay

இப்படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 400 கோடி வரை வணிகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இசையில் இணைய உள்ளார். இப்படத்திற்கு சுமார் 200 கோடி வரை சம்பளமாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வழங்கப்பட்டதாகும் செய்திகள் உலா வருகின்றன.

இன்று 100 கோடி 200 கோடி என்று சம்பள வாங்கும் மாஸ் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் இவரது படங்கள் மிகப்பெரிய தோல்வியை கண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை..!

இவரின் படங்கள் வெற்றி பெறாத காரணத்தால் தமிழ் திரையுலகம் இவரை ராசி இல்லாத நடிகர் என்று ஓரம் கட்ட தொடங்கியது. இவர் தமிழ் சினிமாவுக்கு ஒத்து வர மாட்டார் என்ற கருத்துகளை பரப்பி வந்தனர். சிறிது நாட்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின்பு விஜயகாந்த் உடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தார்.

Vikraman

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடித்தார். இயக்குனர் விக்ரமின் படங்கள் குடும்ப ரசிகர்களுக்கான படமாக இருக்கும். வழக்கமான மசாலா கதைகளை தவிர்த்து பீல் குட் படங்களை எடுப்பது இவரது தனிச்சிறப்பு.

16 வருஷம் ஒண்ணா வாழ்ந்தும் குழந்தை இல்லை.. நடிகை ரேவதியின் விவாகரத்துக்கு என்ன காரணம்?

1996-ம் ஆண்டு வெளியானது “பூவே உனக்காக” படம். இப்படத்தில் விஜய்யுடன் சங்கீதா இணைந்து நடித்திருப்பார். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர் திரையரங்குகளில் 250 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

Vijay and Sangeetha

இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்கள் அமைந்து. தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக தன்னை உயர்த்திக்கொண்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...