பெண்களை வழிக்கு கொண்டுவரும் வழி – திருப்பாவை பாடலும், விளக்கமும் – 11

6dae931bb99fdb1edda8ec8b8daaf335

பாடல்..

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவாய்!

பொருள்:

கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களுமான, ஒரு குறையுமில்லாத, இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணை, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!

விளக்கம்: பெண்களை வழிக்கு கொண்டுவருவதெல்லாம் ரொம்ப சுலபம், அவங்க குலப்பெருமையை பேசினா வழிக்கு வந்திடுவாங்க. அதுமாதிரிதான் தூங்கிட்டு இருக்கும் பெண்ணை வழிக்கு கொண்டுவர அவங்க குலப்பெருமையை உயர்த்தி பேசி துயில் எழுப்பும்படி அமைஞ்சிருக்கு இந்த பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.