பார்வை குறைப்பாட்டை தீர்க்கும் கேரட் ஜூஸ்


6f56f37349be63fe3694502bf2a646f5-1

கேரட்டில் வைட்டமின்களும், பீட்டா கரோட்டினும் அதிகளவில் இருக்கின்றது. கேரட் கண்பார்வைக்கு நல்லது என எல்லாருக்கும் தெரியும். கேரட்டின் ஆழ்ந்த ஆரஞ்ச் நிறம் தரும் பீட்டா கரோட்டின் உடலுக்கு அதிகளவு நன்மை தரும். உடல் எடையை குறைக்கும். புற்றுநோய்க்கு எதிராய் செயல்படும். கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாய் சாப்பிடுவதே நலம் பயக்கும். கேரட்டை சாலட், ஜூஸ் ஆகவும் சாப்பிடலாம்.

b46b3b874bb37c5b183081bd2eba2699

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஜூசினை கொடுத்து பழக்கப்படுத்தலாம். முதலில் ஆறிய வெண்ணீரில் இந்த ஜூசினை கலந்து கொடுக்கவும். போகப்போக இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும். பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கட்டிகளை போட்டும் கொடுக்கலாம். இதனை கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம். கர்ப்பிணி பெண்கள் தினமும் இதை குடிக்கலாம். குழந்தைக்கு நல்ல நிறம் கிடைக்கும். கேரட் அரைத்து வடிகட்டிய விழுதினை முகத்தில் தேய்க்கலாம். முகம் பளபளக்கும்.

தேவையான பொருட்கள்

கேரட் –

பால்

இஞ்சி

சர்க்கரை அல்லது தேன்

தண்ணீர்

செய்முறை… கேரட்டை தோல் சீவி கழுவி மிக்சியில் பால், இஞ்சி சேர்த்து மைய அரைத்து வடிகட்டி, அதனுடன் சர்க்கரை அல்லது தேனை கலந்து தேவைப்பட்டால் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீர் கலந்து கொடுக்கலாம்.

சரிபாதி கேரட், பீட்ரூட் சேர்த்தும் இந்த ஜூசினை செய்யலாம். மாலையில் சோர்ந்து வீடு திரும்பும் பிள்ளைகளுக்கும், மற்றோருக்கும் உடனுக்குடன் புத்துணர்ச்சியை கொடுக்கும் இந்த பானம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews