நம்ம வீட்டுப் பிள்ளை சூப்பர்… பாண்டிராஜுக்கு வாழ்த்துகள்..!!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இந்தத் திரைப்படம் அண்ணன்  தங்கை பாசத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படமாகும்.

மிகவும் எதார்த்தமான நடையில் அண்ணன் தங்கை உறவு, கூட்டுக் குடும்ப உறவுகள் போன்றவற்றினைக் காட்டி இருப்பார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, அனு இம்மானுவேல், பாரதிராஜா, மைனா நந்தினி, நட்டி என்ற நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

0c2048774b33564dc56999ef62e065b0

அப்பா இல்லாமல் அம்மா, தங்கை மற்றும் தாத்தாவுடன் வசிக்கும் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் சித்தப்பா, பெரியப்பா வீடுகளிடம் அனுமதி பெறுவது, அவர்கள் இவர்களை மதிக்காத விதம் போன்றவை மனதினை உருக்கும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.

ஐஸ்வர்யா சிவகார்த்திகேயனுக்கு எதிரியான நடராஜை சூழ்நிலைக்காக திருமணம் செய்துகொள்ள, அதன்பின்னர் மாமன் மச்சானுக்கு இடையே நடைபெறும் பிரச்சினைகளை எதார்த்தமான பாணியில் கூறியவிதமாக அப்படம் அமைந்திருக்கும்.

இந்தப் படம் கடந்த ஞாயிற்றுக் கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, இதனைப் பார்த்த பிரபல இயக்குனர் ஒருவர் பாண்டிராஜுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அதாவது மேயாத மான் மற்றும் ஆடை படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னக்குமார் #NammaVeettuPillai படத்திற்கு பாண்டிராஜுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, @pandiraj_sir தளபதி @actorvijay அண்ணா உடனான கூட்டணிக்கு வெய்யிட்டிங்க்” என்று பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...