சினிமா கலைஞன் பாரி வெங்கட் – கண்ணீர் கதை

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி 20 வருடங்களைக் கடந்துவிட்டது. இப்படம் விஜய் ரசிகர்களிடம் மட்டுமல்லாது எல்லோரிடமும் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதையோடு சேர்ந்த பாடல்களும் சிறப்பாக அமைந்ததே படத்தின் வெற்றிக்கு சிறப்பாக அமைந்தது.

da96b095cf32584056ba5d680054afc5-2

இந்த படத்தில் நடித்திருந்தவர் பாரி வெங்கட். அதற்கு முன் எஸ்.வி. சேகரின் நாடகங்களில் நடித்து வந்தார் பாரி வெங்கட். இருப்பினும் பாரி வெங்கட் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.

இயக்குனர் எழில் தனது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இந்த நகைச்சுவை கலைஞரை அறிமுகப்படுத்தினார்.

அதில் ஒரு அட்ரஸ் சொல்லும் காட்சி சென்னை பாஷையில் வெளுத்து கட்டி இருப்பார் பாரி வெங்கட். அதில் டவுசர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.பெரும் வரவேற்பை பெற்ற டவுசர் பாண்டி கதாபாத்திரத்தால் பாரி வெங்கட்டுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அந்த நேரத்தில் வந்த ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்தார்.பிஸியின் உச்சத்தில் இருந்த பாரி வெங்கட் திருநெல்வேலி படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை சென்று விட்டு ஆம்னி பஸ்ஸில் சென்னை திரும்பியபோது விபத்தில் மரணமடைந்தார்.

1999ம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில்மரணமடைந்தார். அடையாளம் தெரியாததால் அவரது பிணத்தை போலீசாரே புதைத்து விட்டனர். பின்னர் உண்மை தெரிந்த அவரது குடும்பத்தினர் பிணத்தை மீட்டு, முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தினர்.

உச்சத்துக்கு சென்ற பாரி வெங்கட் ஒரு சில மாதங்களிலேயே மரணமடைந்தது சினிமா ரசிகர்களை கலங்க செய்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews