இந்த வயசுலயும் மனுஷன் இன்னாம்மா கிரிக்கெட் விளையாடுறாரு!.. ப்ளூ ஸ்டார் கதையே பா. ரஞ்சித்தோடது தானா?..

பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வாரம் திரையரங்குகளில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன், மகேஷ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள தூக்கு துரை மற்றும் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ப்ளூ ஸ்டார் மற்றும் ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன.

கிரிக்கெட் விளையாடிய பா. ரஞ்சித்: 

பா. ரஞ்சித்தின் நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் கிரிக்கெட் விளையாடும் இரு குழுக்களுக்கு இடையேயான போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் அரசியல் பிரச்சனையை மையப்படுத்தி இந்தப் படத்தை ஜெயக்குமார் உருவாக்கி இருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் பா ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடி ஒருத்தர் பழத்தை இன்னொருத்தர் மாறி மாறி புரோமோஷன் செய்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கிரிக்கெட் மைதானத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளும் அதிரடியாக ரன்களை அடித்து நொறுக்கும் காட்சிகளையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ப்ளூ ஸ்டார் படத்தை ப்ரோமோட் செய்துள்ளார். ப்ளூ ஸ்டார் படத்தின் ஹீரோ அசோக் செல்வன் பெயரே படத்தில் ரஞ்சித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில் பற்றி பேச்சு:

சமீபத்தில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும்போது நம்முடைய வீடுகளில் விளக்கு ஏற்றவில்லை என்றால் நாமும் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள் என அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றது மற்றும் அவர் அது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக தனக்கு விமர்சனம் உள்ளதாகவும் பேசியது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூ ஸ்டார் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படமும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி பெறப் போகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சிங்கப்பூர் சலூன் படத்தின் காட்சிகள் எல்லாம் மொக்கையாக உள்ளதாக ஸ்னீக் பீக் பார்த்தே ரசிகர்கள் கடுப்பாகி வரும் நிலையில், ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் இந்த வாரம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.