செய்திகள்

தமிழ்நாட்டில் 10877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30 மாணவர்களே படிக்கிறார்கள்.. விவரம்

சென்னை: கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

“தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 10 ஆயிரத்து 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 30 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். அது குறித்த விபரங்கள் பின்வருமாறு:- மாவட்டம் மற்றும் பள்ளிகளின் விவரங்களை பார்ப்போம்.

1. திருப்பூர் 546
2. ஈரோடு 509
3. திண்டுக்கல் 496
4. ராமநாதபுரம் 475
5. திருவண்ணாமலை 468
6. புதுக்கோட்டை 409
7. சிவங்கை 463
8. சேலம் 401
9. தஞ்சாவூர் 395
10. நாமக்கல் 399
11. கிருஷ்ணகிரி 399
12. கரூர் 327
13. தருமபுரி 346
14. திருச்சிராப்பள்ளி 334
15. திருவள்ளூர் 393
16. விழுப்புரம் 394
17. கடலூர் 330
18. தூத்துக்குடி 353
19. விருதுநகர் 348

30 மாணவர்கள் முதல் 100 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 12,937 என்றும், 100 முதல் 250 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 6,262 என்பதும் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரியவந்துள்ளது. 250 மாணவர்கள் முதல் ஆயிரம் மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் எண்ணிக்கை 1,145 என்ற அளவிலும், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் வெறும் 12 தான் என்பதும் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் பார்க்க முடிந்தது.

இந்த 12 பள்ளிகள் எங்கு உள்ளன. சென்னை மாவட்டத்தில் 7, திருப்பூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியும் உள்ளன.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 6,254 அரசுப் பள்ளிகளில், 30 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் 5 பள்ளிகளும், சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் தலா ஒரு பள்ளியும், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் தலா 2 பள்ளிகளும் இருக்கின்றன.

30 முதல் 100 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 536 ஆக உள்ளது. 101 முதல் 250 மாணவர்கள் வரை இயங்ககூடிய பள்ளிகள் எண்ணிக்கை 2,183 ஆக உள்ளது. 250 – 1000 மாணவர்கள் வரை 3,047 அரசுப் பள்ளிகளும், 1000 மாணவர்களுக்கு மேல் 472 பள்ளிகள் மட்டுமே உள்ளன.

Published by
Keerthana