80-களின் காதல் கோட்டை ‘ஒரு தலைராகம்’ ஹீரோயின் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?

தலை நிறைய முடி, பெல்ஸ்பாட்டம் பேண்ட், கையில் வாட்ச், நீண்ட காலர் வைத்த சட்டை என 80களில் இளைஞர்களாகத் திகழ்ந்தவர்களின் ஆஸ்தான உடையை அறிமுகப்படுத்திய படம் எதுவென்றால் அது ‘ஒருதலை ராகம்‘ தான்.  இசை, கதை, வசனம், இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று முதன்முதலாக திரையில் வித்தை காட்டியிருந்தார் டி.ராஜேந்தர்.

தமிழ் சினிமா அதுவரை கண்டிராத உணர்வுப் பூர்வ காதலை முதன்முதலாக வெளிக் கொணர்ந்த படம். டி.ராஜேந்தரின் உருக வைக்கும் பின்னணியும், கிளாசிக் ஹிட் பாடல்களும் படத்தை வேறொரு தளத்தில் எடுத்துச் சென்றது. திரையரங்குகளில் ஒருவருடத்திற்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது ஒருதலை ராகம்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் படத்தில் ஹீரோ முதல் அனைவருமே புதுமுகங்கள். வலுவான கதையும், நடிகர்களின் உணர்வுப் பூர்வமான நடிப்பாலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சங்கர், தியாகு, சந்திரசேகர், ரூபா, ரவீந்திரன், உஷா ராஜேந்தர் உள்ளிட் பலர் நடித்திருந்தனர்.

இதில் ஹீரோயினாக நடித்த ரூபா தேவி அப்போதைய இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். தனக்கும் இந்த மாதிரி ஒரு ஹோம்லியான முகம் கொண்ட துணைவிதான் வேண்டும் என ஏங்க வைத்தவர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் இதற்கு பின்னர் தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.

ஒருதலை ராகம் படத்திற்கு பின்னர் தமிழில் சில ஆண்டுகளிலேயே பட படங்கள் நடித்தார். 1980-82 ஆகிய இந்த இரண்டு ஆண்டில் மட்டும் 15கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர்  பின்னர் 8 ஆண்டு கழித்து பாட்டுக்கு நான் அடிமை படத்தில் ராமராஜன் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் இவரால் ஜொலிக்க முடியவில்லை இருப்பினும் கன்னட திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

1990க்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தார். இவர் நடிகை என்பதை தாண்டி சிறந்த டான்சரும் கூட கன்னட சினிமாவில் பல படங்களில் பல பாடல்களில் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது தமிழில் ஏன் டான்சராக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அதுக்குத் தடையாக இருந்தது, `ஒருதலை ராகம்’ போன்ற படங்கள்தான்’

ஊத்திக் கொண்ட பிசினஸ்.. தெரு தெருவாய் பேப்பர் போட்டு சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் ஆன கதை

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சேலைகட்டி பவ்யமான பெண்ணாக நடிச்சிட்டேன். அதனால, என்னை எல்லா ரசிகர்களும் அப்படியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்தில் டான்ஸர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இயக்குநர்களும் எனக்கு ஹோம்லி கேரக்டர்களையே கொடுத்துட்டாங்க. கடைசிவரை தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்க முடியலையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. மற்றபடி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா ரோல்களிலும் நடித்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

தற்போது, கன்னட சீரியல்களில் நடித்து வரும் ரூபாதேவி, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் இப்போ காலேஜ் படித்து வருகிறார். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், எங்க வாழ்க்கை மிக திருப்தியாகப் போவதாகத் தெரிவித்துள்ளார் ரூபாதேவி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...