ஊத்திக் கொண்ட பிசினஸ்.. தெரு தெருவாய் பேப்பர் போட்டு சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் ஆன கதை

சினிமாவில் சாதிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகழ்பெற்ற ஹீரோக்கள் முதல் துணை நடிகர்கள் வரை அவர்கள் கடந்து வந்த பாதைகள் ஏராளம். கிடைத்த வேலையைச் செய்து சினிமாவில் எப்படியாவது நடித்துப் புகழ்பெற வேண்டும் என்று தவமிருந்து எம்.ஜி.ஆர் முதல் நேற்று வந்த ஹீரோவரை இந்த சாதனைப் பட்டியலில் இருக்கின்றனர். இவ்வாறு கிடைத்த வேலையைச் செய்து சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை வந்து ஆரம்ப காலகட்டங்களில் பல சோதனைகளைக் கடந்து வந்தவர்தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

இன்று சரத்குமார் இருந்தால் அந்தப் படம் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் இப்போதுள்ள இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருகிறார். அவர் எப்படி சினிமாவில் சாதித்தார் என்பதை ஒரு பேட்டி ஒன்றில் கூறிய போது, “ஆல் இந்தியா ரேடியோவில் நியூஸ் வாசித்த வாசிப்பது ராமநாதன் என்னுடைய அப்பா தான்.

நான் டெல்லியில் தான் பிறந்து அங்குதான் எனது பள்ளிக் கல்வியைத் தொடங்கினேன். எனக்கு இந்தி, இங்கிலிஷ், கன்னடா, மலையாளம், ரஷ்யன் ஆகிய மொழிகள் தெரியும். அதுக்கு என் அப்பா தான் காரணம். அவர் நிறைய மொழிகளை கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் இனி நாடோடி தான் என கிண்டல் செய்தவர்களை மூக்குடைய வைத்த நாடோடி மன்னன்..

நான் ஐஏஎஸ் அகாடமியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போ அரசியலில் இருந்த என்னுடைய மாமா தான் இது வேண்டாம். எதுவும் பிசினஸ் செய் என்றார். அதையடுத்தே அப்போது பிரபலமாக இருந்த பத்திரிக்கை ஒன்றில் நிருபராக வேலைக்கு வந்தேன். ஆனால் பெரிய ரீச் இருக்காது. ட்ரன்க் கால் கொடுத்து அந்த தகவலை சொன்னதுக்கே 30 நிமிடம் வரை ஆகும். அந்த சமயங்களில் பேப்பர் போடும் வேலையை கூட செய்து இருக்கேன்.

அங்கு கிரிமினல் செய்திகள் கொடுக்கும் வேலைகளை செய்தேன். 6 வருடம் வேலை செய்து வந்தேன். அதை தொடர்ந்து என்னை வளர்த்துக்கவே டெலிவிஷன் ஸ்டோர் வைத்தேன். டெலிவிஷன் பிசினஸ் செய்யும் போது பெரிய அளவில் 150 டிவிகளை வாங்கி குவித்தேன். அதில் நமக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் தருவார்கள். அதை நம்பி வாங்கினேன்.

ஆனால், அந்த நேரத்தில் தான் கலர் டிவி 3000த்துக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்தது. நான் வைத்து இருந்த டிவிகள் எல்லாம் 7000 ரூபாய் மதிப்புடையது. யார் அதை வாங்குவார்கள்? மிகப்பெரிய நஷ்டம் ஆனது. அதனால் தான் அங்கிருந்து சென்னை வந்தேன். இங்கு வந்த பின்னரே டிராவல் பிசினஸ் செய்தேன்“ என்றார் சரத்குமார்.

பின்னர் இவரது உடல்வாகுவைப் பார்த்து இவர் நண்பர் சினிமாவில் வாய்ப்புத் தேடுமாறு ஊக்கமளிக்க பின் முயற்சி செய்து கண்ணதாசன் என்பவர் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் இதை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தெலுங்கில் நடிகராக அறிமுகமானார். அதற்கடுத்த வருடமே ‘சின்ன பூவே மெல்ல பேசு‘ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் மளமளவென படங்களில் நடித்துத் தள்ளியவர் வில்லன், ஹீரோ என பல ஹிட் படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.