பொழுதுபோக்கு

இவங்களுக்கு தான் ரைட்ஸ் இருக்கு… இளையராஜா சர்ச்சைக்கு கே. எஸ். ரவிக்குமார் கருத்து…

கே. எஸ். ரவிக்குமார் தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, இ. ராமதாஸ், கே. ரங்கராஜ் போன்றோருக்கு உதவியாக இருந்தார். பின்னர் விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ திரைப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்படம் வெற்றிப் பெற்று கே. எஸ். ரவிகுமாருக்கு இயக்குனராகும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

1990 ஆம் ஆண்டு ‘புரியாத புதிர்’ திரைப்படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார் கே. எஸ். ரவிக்குமார். 1991 ஆம் ஆண்டு இயக்குனராக ‘சேரன் பாண்டியன்’ படத்தை இயக்கி அறிமுகம் ஆனார். 1994 ஆம் ஆண்டு ‘நாட்டாமை’ திரைப்படத்தை இயக்கினார். இவ்விரு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

‘நாட்டாமை’ படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார் கே. எஸ். ரவிக்குமார் அவர்கள். அதைத் தொடர்ந்து ‘முத்து’, ‘பரம்பரை’, ‘நட்புக்காக’, ‘அவ்வை ஷண்முகி’, ‘நட்புக்காக’, ‘படையப்பா’, ‘மின்சாரக் கண்ணா’, ‘சமுத்திரம்’, ‘தசாவதாரம்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களைப் பெற்றவர். ‘சேரன் பாண்டியன்’, ‘அருள்’, ‘தலைநகரம்’, ‘கோமாளி’, ‘அன்னபூரணி’, ‘அரண்மனை 4’ போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பார் கே. எஸ். ரவிக்குமார்.

இந்நிலையில், தற்போது இசைஞானி இளையராஜா தனது பாடல்களை தன்னிடம் அனுமதி பெறாமல் உபயோகப்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையை கிளப்பி பேசுபொருள் ஆக உள்ளது. இதைப் பற்றி கே. எஸ். ரவிக்குமார் அவர்களும் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியது என்னவென்றால் ஒரு தயாரிப்பாளர் கதையை ஓகே பண்ணி காசு கொடுக்கிறார். கதையோட சூழலை டைரக்டர் ஓகே பண்றார். டைரக்டர் பாடலுக்கான சிட்டுவேஷனை சொல்றார். அதைக் கேட்டுட்டு இசையமைப்பாளர் பாடலை உருவாக்குகிறார். இது எல்லாத்துக்கும் தயாரிப்பாளர் தான் காசு கொடுக்கிறார். அப்படிப் பார்த்தால் தயாரிப்பாளர்க்கு தான் ரைட்ஸ் இருக்கு என்று கூறியுள்ளார் கே. எஸ். ரவிக்குமார்.

Published by
Meena

Recent Posts