ஜூனில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் Nord 3 5G.. செம்ம ஸ்மார்ட்போன்..!

ஒன்ப்ளஸ் Nord 3 இந்தியாவின் விலை ஜூன் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போம் குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ:

ஒன்ப்ளஸ் Nord 3 5G ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளதால் ஒன்ப்ளஸ் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒன்ப்ளஸ் Nord 3 இந்தியாவில் ரூ.30,000 அல்லது ரூ.32,000 என்ற விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான விலை தெரியவில்லை என்றாலும் ஒன்ப்ளஸ் ரூ. 30,000 ஐத் தாண்டும் என்பது மட்டும் உறுதி.

ஏற்கனவே ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் போன்களின் சுமார் ரூ.30,000ஐ ஒட்டி இருப்பதால் இந்த போனும் ரூ.30,000 க்கும் அதிகமான விலை கொண்டதாகத்தான் இருக்கும்.

ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் ஒரு 5G ஃபோன் மட்டுமின்றி 1.5K தெளிவுத்திறன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டது. மேலும் 6.74 இன்ச் அளவு இருக்கும். இது ஒரு AMOLED ஆக இருக்கலாம்.

மேலும் இந்த போன் MediaTek Dimensity 9000 SoC இருக்கலாம் என்றும், இது ஒரு ஃபிளாக்ஷிப்-கிரேடு சிப்செட் என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா உள்ளது. இது 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவுடன் இணைக்கப்படலாம். முன்பக்கத்தில், 5G தொலைபேசியில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும். இது நிறுவனத்தின் சிக்னேச்சர் அலர்ட் ஸ்லைடர் அம்சத்தைத் தக்கவைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 14 OS இன்னும் வெளியாகவில்லை என்பதால் ஒன்பிளஸ் Nord 3 ஆனது ஆண்ட்ராய்டு 13 OS உடன் அறிமுகமாகும் என தெரிகிறாது. மேலும் 5,000mAh பேட்டரியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளதால் இது ஒரு செம்ம போனாக கருதப்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews