ஒரு பக்கம் சிவம் துபே! இன்னொரு பக்கம் ராபின் உத்தப்பா!! இதுதான்யா பழைய சிஎஸ்கே..!!!

தற்போது 15வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. முந்தைய நான்கு இடங்களில் தொடர்ந்து படுதோல்வி அடைந்து உள்ளது.

இதனால் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறுள்ள நிலையில் இன்றைய தினம் அதிக ரசிகர்கள் கூட்டம் கொண்ட பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க வீரரான ருத்ராஜ்  அவுட்டாகி அதன் பின்னர் வந்த மொயின் அலி ஒற்றை ரன்களில் வெளியேறினார்.

இதனால் ராபின் உத்தப்பா மற்றும் சிவம் துபே ஆகியோர் இணைந்து ஆர்சிபி பந்துகளை பறக்க விட்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 215 ரன்கள் எடுத்துள்ளது இதில் கேப்டன் ஜடேஜா வந்த முதலிலேயே அவுட்டாகி வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியின் சிவம் டுபே அதிகபட்சமாக 94 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடக்கின்ற இந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிச்சயமாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.