தன் பிறந்தநாளை முன்னிட்டு சமந்தா தனது புதுப் படமான ‘பங்காரம்’ போஸ்டரை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்…

தனது விடாமுயற்சி, உழைப்பு, திறமை மூலம் நகைக்கடை விளம்பரத்தில் ஆரம்பித்து இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வ்ருகிறார். 2007 ஆம் ஆண்டு ‘மாஸ்கோவின் காவிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

2022 ம் ஆண்டு மயோசிட்டிஸ் என்ற நோய் இருப்பதை கண்டறிந்து சிகிச்சைக்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார். இவர் திரும்பி எப்படி வருவார் என்று யோசித்தவர்கள் முன்னிலையில் கம்பேக் கொடுத்து தன்னம்பிக்கை இருந்தால் நோய் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 37வது பிறந்தநாளை முன்னிட்டு ‘பங்காரம்’ என்ற புதிய படத்தை அறிவித்தார். தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘பங்காரம்’ போஸ்ட்டரை பகிர்ந்துள்ளார். பங்காரம் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நாட் எவெரிதிங் ஹாஸ் டு பி க்ளிட்டேர் அஸ் கோல்டன்” . #Bangaram @tralalamovingpictures விரைவில் தொடங்கும்,” என்று அவர் தனது பதிவில் தலைப்பிட்டுள்ளார்.

சமந்தா கடைசியாக நடித்து வெளியான படம் ‘குஷி’. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மற்றும் இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானது. அடுத்ததாக வருண் தவானுக்கு ஜோடியாக ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற பிரைம் வீடியோ தொடர் வெளிவர உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...