விசித்ராவிடம் எகிறிய நிக்சன்!.. வெளியே போனா உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்.. அதட்டிய அர்ச்சனா!..

பிக் பாஸ் வீட்டில் ஐஷூ 40 நாட்கள் இருந்தும் ஒண்ணும் பண்ணாமல் இருந்ததற்கு காரணமே நிக்சன் தான் என நெத்தியடியாக விசித்ரா பேசிய நிலையில், விசித்ராவிடம் எகிற ஆரம்பித்து விட்டார் நிக்சன். ஐஷுவை தொடர்ந்து நிக்சனையும் வெளியே அனுப்ப பக்காவாக விசித்ரா பிளான் போட்டு விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50வது நாளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 47வது நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியானது.

பிக் பாஸ் 47வது நாள் முதல் ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை ஆகி விட்டதே இந்த வாரம் இதுவரை தினேஷ், விஷ்ணுவின் சண்டைக்கு வாடா என்கிற சப்பையான சண்டை மட்டுமே இருந்து வந்த நிலையில், கமல் பஞ்சாயத்து பண்ணும் அளவுக்கு பெரிய சண்டை இல்லையே என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வெள்ளிக்கிழமை ட்ரீட்டாக பிக் பாஸ் போட்டியாளர்கள் சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.

பிரதீப் ஆண்டனியிடம் நிக்சன் எகிறிய போது அவருக்கு கிடைத்த ஹைப் அதன் பிறகு ஐஷுவை தடவ ஆரம்பித்ததும் நிக்சனை அசிங்கமான பெயர் கொண்டு அழைக்கும் அளவுக்கு அவரது நிலைமை மோசம் அடைந்து விட்டது.

நிக்சன் பண்ண அலப்பறையில் ஐஷுவின் பெற்றோர்கள் விஜய் டிவிக்கே சென்று தங்களது பெண்ணை வெளியே விட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தான் ஐஷூ வெளியேற்றப்பட்டார் என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

நிக்‌ஷன் – விசித்ரா சண்டை

ஆனால், குறைந்த ஓட்டுக்களின் அடிப்படையில் அவர் வெளியேறியதாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டியிருந்தனர். இந்நிலையில், ஐஷூவின் வெளியேற்றத்திற்கு காரணமே நிக்சன் தான் என விசித்ரா பிளேம் பண்ண, நான் பண்ணது தப்புன்னா அப்புறம் ரவீனாவும் மணியும் பண்றது தப்பு தான். விஷ்ணுவும் பூர்ணிமாவும் பண்ற லவ் கன்டென்ட்டும் தப்பு தான் என நிக்சன் பொங்கி எழ ஆரம்பித்து விட்டார்.

நிக்சனுக்கும் விசித்ராவுக்கும் மோதல் முத்த ஆரம்பிக்க, நடுவே நிக்சன் அர்ச்சனா பற்றி இழுக்க, உள்ளே புகுந்த அர்ச்சனா எல்லாரும் ஒரு நாள் எலிமினேட் ஆகி வீட்டுக்குத்தான் போவோம். அப்படி நீ வெளியே போகும் போது பாரு, நீ இந்த வீட்டுல அடிச்ச கூத்தும், வெளில உனக்கு கிடைச்சிருக்க பேரையும் என ஒரே போடாக போட்டு நிக்சனை ஆஃப் செய்து விட்டார்.

இந்த சீசன் பிக் பாஸ் டைட்டிலை விசித்ராவுக்கு பதிலாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா தான் வெல்வார் என அவரது ரசிகர்கள் தற்போது உறுதியாக நம்ப ஆரம்பித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...