மகன் கேட்ட ஒரு கேள்வி.. அரசியலை விட்டு அமெரிக்காவில் செட்டில்.. நெப்போலியன் பகிர்ந்த தகவல்..!!

Nepoleon:1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இந்த திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

புது நெல்லு புது நாத்து படம் நெப்போலியன் நடித்த முதல் படம். இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் பிறகு பல படங்களில் நாயகன், குணச்சித்திர வேடம் போன்ற கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொருந்தும்.

தேவர் மகன் படத்தில் நடிகர் சிவாஜி செய்த செயல்… அமைதியாக ஏற்றுக் கொண்ட கமல்!

100க்கும் அதிகமான படங்களில் நடித்த இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்தார். நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு மகன்கள் இந்த தம்பதிக்கு உள்ளனர். இதில் மூத்த மகன் தனுஷ் இளைய மகன் குணால்.

தனுஷ் சிறு வயது முதலே நடக்க முடியாமல் வீல் சேரில் தான் இருக்கிறார். இதனால் அவரது சிகிச்சையை கருத்தில் கொண்டு நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவில் செட்டில் ஆனது. இது குறித்து நெப்போலியன் பேட்டி ஒன்றில் கூறும் போது 17 வயது வரை தான் இது போன்ற குழந்தைகள் உயிருடன் இருப்பார்கள் என்று கூறினார்கள்.

முதல் படம்.. முதல் காட்சியிலேயே கொலை செய்யணும்.. தயங்கிய நெப்போலியன்.. பாரதிராஜா செய்த செயல்..!!

நானும் எனது மனைவியும் எவ்வளவோ நாட்கள் அழுதோம். எப்படியும் மகனை காப்பாற்றி விட வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சென்றால் சிகிச்சைக்காக ஒரு வருடம் இரண்டு வருடம் அங்கு தங்க வேண்டிய நிலை உருவாகும் என்று அமெரிக்காவில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி கிரீன் கார்டு பெற்றேன் என கூறியுள்ளார்.

அதோடு அவரது மகன் தனுசுக்கும் அமெரிக்கா பிடித்து விட்டது. இந்தியாவில் இருந்தால் வீல் சேரில் இருக்கும் தன்னை எல்லோரும் வித்தியாசமாக பார்ப்பதாகவும் அமெரிக்காவில் சகஜமாக உணர்வதாகவும் கூறியுள்ளார். இதனால் மொத்த குடும்பமும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது.

மலையாளத்தில் படு தோல்வி.. தமிழில் மெகா வெற்றி.. காரணமே இந்த வில்லன் நடிகர்தானாம்..!!

ஆனால் நெப்போலியன் அரசியலில் இருந்ததால் அவர் இந்தியாவுக்கு வரவேண்டிய சூழல் இருந்தது. இந்த சமயத்தில் அவரது மகன் தனுஷ் மீண்டும் நாங்கள் அப்பா இல்லாமல் தான் இருக்க வேண்டுமா என்று கேட்டுள்ளார். இதனால் மிகுந்த வேதனை அடைந்த நெப்போலியன் அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டு அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடனையே இருக்க தொடங்கியுள்ளார். அதோடு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews