12 கோடி அப்பு… வாயடைக்க வைக்கும் நயன்தாராவின் சம்பளம் எந்தப் படத்திற்குத் தெரியுமா?

இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு அடுத்த படியாக கரன்சிகளில் புரளும் நடிகை என்றால் அது தீபிகா படுகோனே தான். அவரின் சினிமா மார்க்கெட் மதிப்பு 20 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு அடுத்ததாக பாலிவுட் நடிகைகளாக ஆலியாபட், ஜான்விகபூர், கியாரா அத்வானி ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டாரும் இணைந்து விட்டார்.

ஷாரூக்கானுடன் இவர் ஹீரோயினாக நடித்த ஜவான் படம் நயன்தாராவின் சம்பளத்தை எகிற வைத்திருக்கிறது. போதாகுறையாக படமும் கலெக்ஷனில் கல்லா கட்டா தனது சம்பளத்தை இன்னமும் அதிரடியாக உயர்த்தியிருக்கிறார் நயன்தாரா. அந்தப் படத்தில் இவருக்கு 11 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

நயன்தாரா சினிமாவுக்கு வந்த புதிதிலேயே சரத்குமார், சூப்பர் ஸ்டார், அஜீத், விஜய் என வரிசையாக முன்னணி நாயகர்களுடன் டூயட் போட்டார். பின் அறம் படத்தின் வெற்றி இவரை லேடி சூப்பர் ஸ்டாராக மாற்றியது. தொடர்ந்து ஐரா, நெற்றிக்கண், கோலமாவு கோகிலா, o2 போன்ற படங்களில் கதையின் நாயகியாக நடித்து தனக்கென தனி  ரசிகர்பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் உலக நாயகனுடன் மட்டும் இன்னும் சேர்ந்து நடிக்காத நிலையில் தற்போது அதுவும் கைகூடி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரவை அணுகியிருக்கிறார்கள்.

இது படம் இல்ல… பாடம்.. ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடிய சீமான்

ஆனால் அவரின் சம்பளம் 6 கோடி என்று பேசப்பட்டதாம். உடனே நயன்தாரா ”பாலிவுட் சென்ற பின்நிலைமை மாறிவிட்டது. 12 கோடி சம்பளம் என்றால் அட்வான்ஸ் கொடுங்கள். இல்லையென்றால் நடையைக் கட்டுங்கள்” என்று கூறிவிட்டாராம். இதனால் தயாரிப்பு நிறுவனம் ஷாக் ஆகி விட்டதாம்.

மேலும் தான் சம்பாதித்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் நயன்தாரா. இவ்வாறு இருக்க மீண்டும் இவர் கதையின் நாயகியாக நடித்து முடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் நயன்தாரா ஐயங்கார்  வீட்டுப் பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். ஏற்கனவே யாரடி நீ மோகினி படத்தில் ஐயங்கார் வீட்டுப் பெண்ணாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதால் உலக நாயகனுடன் ஜோடி சேர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews