தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்திற்கு 2 தங்கம்..!!

குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழக அணி 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவில் தேசிய விளையாட்டு போட்டிகள் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீண் சித்ரவேல் 16.68 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார்.

அதே போல் வாள்வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானிதேவி பஞ்சாப் வீரங்கனையை வீழ்த்தி 3-வது முறையாக தங்க பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அணி இதுவரையில் 2 தங்கப்பதக்கம் உட்பட 7 பதக்கங்களை வென்று 8-வது இடத்தில் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.