வில்லன் நடிகருக்கு வெள்ளித்தட்டில் விருந்து பரிமாறிய ஜெயலலிதா.. நம்பியார் ஜெ.வை கூப்பிடுவது இப்படித்தானாம்..

புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு ஓர் குணம் தனக்கு மிக நெருக்கமானவர்களை அன்போடும், கனிவோடும் உபசரிக்கும் குணம் கொண்ட அவர் தனது எதிரிகளை காலில் விழச் செய்யவும் தயங்கியதில்லை. அதனால்தான் அவர் இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்படுகிறார். திரைக்கு அப்பாற்பட்டு அரசியலில் ஜெயலலிதாவைக் கண்டு பயப்படாத அரசியல் தலைவர்களே இல்லை. ஒற்றைப் பெண்மணியாக தமிழ்நாட்டையே தனது விரலசைவில் வைத்திருந்தார்.

ஆனால் அவரின் மறுபக்கத்தைப் பார்த்தால் மிகுந்த கனிவுள்ளம் கொண்டவர். திரையில் இவர் நடித்துக் கொண்டிருந்த போது அப்போது வில்லத்தனத்தில் மிரட்டிய நம்பியாருக்கும் இவருக்கும் இருந்த நட்பு பற்றிப் பார்ப்போம். தமிழ் சினிமாவில் அப்போது உச்ச நாயகியாக இருந்த ஜெயலலிதாவிற்கு திடீரென நம்பியார் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. உடனே கிளம்பியவருக்கு, அவருக்கு பிடித்தமான உணவுகளை தயார் செய்து வைத்து காத்திருந்தார்களாம் நம்பியாரும் அவரது மனைவியும்.

ஜெயலலிதாவினை உட்கார செய்து, வெள்ளித் தட்டில் அவருக்கு உணவு பரிமாறியிருக்கிறார் நம்பியார். தனக்கு இத்துணை மரியாதை கொடுத்த நம்பியாரை ஜெயலலிதாவால் மறக்க முடியவில்லை. பின்னொரு நாளில், ஜெயலலிதா தமிழக முதல்வரானதும் நம்பியார் மற்றும் அவரது மனைவியை தனது வீட்டுக்கு அழைப்பு விடுத்தார். இருவருக்கும் மதிய உணவிற்கு தடபுடலாக விருந்து செய்யப்பட்டது.

பாட முடியாது என அழுத பி.சுசீலா.. எம்.எஸ்.வி.-யின் நம்பிக்கையால் பாடி தேசிய விருது பெற்ற ஹிட் பாடல் இதான்

அப்போது, நம்பியாரை உட்கார வைத்து வெள்ளி தட்டிலே உணவுகளை பரிமாறினாராம் ஜெயலலிதா. எனக்கு நீங்கள் கௌரவப்படுத்தி உபசரித்த அதேப்போல உங்களையும் உபசரிக்க வேண்டும் என்று அவருக்கும் வெள்ளித்தட்டில் பரிமாறினாராம். ஆனால் இந்த இரு சம்பவத்திற்கும் பல வருட இடைவேளை இருந்ததாம்.

இதனால் மகிழ்ந்து போன நம்பியார் தனது திரையுலக சகாக்களிடம் அம்மு எதையும் மறப்பது இல்லை. எல்லாத்தையும் அப்படியே ஞாபகம் வைச்சிருக்கு..” என்று சொல்லிச் சொல்லி பாராட்டினாராம். இதை தொடர்ந்தே பலருக்கு நம்பியார், ஜெயலலிதாவை அம்மு என அழைக்கும் விஷயமே பலருக்கு தெரிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.