இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்

தமிழ் சினிமாக்களில் ஆரம்ப காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், டணால் தங்கவேலு போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் நடித்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றனர். மேலும் தங்களது நகைச்சுவையில் பிறர் மனம் புண்படாபடியும், கிண்டல் செய்யாதபடியும் நடித்தனர்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக வந்தவர் தான் நாகேஷ். நகைச்சுவை சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட நாகேஷ் தனது உடல்மொழியால் ரசிகர்களைக் கவர்ந்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி முதல் இப்போதுள்ள தனுஷ் வரை கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர்.

அப்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒருமுறை இவருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. எதிர்முனையில் பேசியவர் நான் உங்கள் ரசிகன். பெயர் சாஸ்திரி சென்சார் போர்டு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் நான் உங்களைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு நேரம் இருப்பின் தி.நகரில் நீங்கள் ஷுட்டிங் போகிற வழியில் எனக்காக ஒரு 10 நிமிடம் ஒதுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

அதேபோல் நாகேஷ் ஷுட்டிங் போகிற வழியில் அன்றைய தினமே அவரைச் சந்தித்திருக்கிறார். அவர் மிகவும் கறாரானவர். மேலும் திறமையான நல்ல மனிதர். இவரைக் கண்டாலே பல சினிமாக் காரர்களுக்கு நடுக்கம் வந்துவிடுமாம். நாகேஷை அன்புடன் வரவேற்று உபசரித்தவர். உங்களுடைய அனைத்துப் படங்களையும் பார்த்து விடுவேன். நேற்று முன்தினம் வந்த படம்.. அப்போது நாகேஷ் குறுக்கிட்டு அன்னை இல்லம் சார் என்று கூற.. ஆம் அதையும் பார்த்து விட்டேன்.

என்னுடைய காமெடி பிடித்திருந்ததா என்று நாகேஷ் கேட்க, சென்சார் அதிகாரி நாகேஷ் ஒருகனம் அவரைப் பார்த்து இதை காமெடின்னா சொல்வீங்க என்று கேட்டிருக்கிறார். நாகேஷுக்கு அதிர்ச்சியாகி இருக்கிறது. ஏ..ஏ..ஏ.. என்னப்பா நீ-ன்னு இழுத்து இழுத்து பேசுற திக்குவாய் உங்களுக்குக் காமெடியா இருக்குதா? என்று கேட்டிருக்கிறார்.நாகேஷ் மௌனமாக நிற்க, இப்படி திக்குவாய் குறைபாடு உள்ளவர்களை வைத்து காமெடி செய்திருப்பதற்காகவே இந்தப் படத்தை தடை செய்யலாம் என நினைத்தேன்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?

தமிழ்நாட்டுல இந்தமாதிரி எத்தனையோர் பேர் திக்குவாயாலா பாதிக்கப்பட்டிருப்பாங்க. அவங்க இந்தப் படத்தைப் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று கேட்டார். அப்போது நாகேஷ்க்கு சம்மட்டியால் அடித்தாற் போல் இருந்தது.

அப்போது அந்த அதிகாரி நாகேஷ் முன் கையை நீட்டி இனிமேல் இதுபோல் அடுத்தவர்களின் குறைபாடுகளை கிண்டல் செய்யும் விதமாய் நடிக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள். நான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கிறேன் என்று கேட்டார். நாகேஷும் கலங்கிய கண்களுடன் அவ்வாறே சத்தியம் செய்து கொடுத்து அதற்கு அடுத்து நடித்த படங்களில் யாரையும் உருவ கேலி செய்யும் விதமாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews