நடிகர் திலகத்தின் ஒரு படத்திற்கு இன்ஸ்பிரேஷனான ரியல் பிச்சைக்காரர்.. சிவாஜின்னா பின்ன சும்மாவா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு என்று வந்து விட்டால் போதும் தனது சின்னச் சின்ன அசைவுகளில் கூட மனிதன் சும்மா கலக்கி விடுவார். அந்த அளவிற்கு நாடி நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறியவர். தான் நடிப்பின் மேல் ஒரு கண் கொண்டாலும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது,  ஒவ்வொருவரின் மேனரிசம் எப்படி, எப்படி பேசுகிறார்கள் என சகலத்தையும் கவனிப்பவர்.

தனது படங்களில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் என்றோ பார்த்த ஒரு நிகழ்வினை நடிப்பில் கண்முன் கொண்டு வந்து நிறுத்துபவர். இப்படி சிவாஜிகணேசனின் நடிப்பினைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில் சிவாஜி கணேசனும், மேஜர் சுந்தர்ராஜனும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஒருமுறை இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது சிக்னலில் கார் நின்றிருக்கிறது. அப்போது எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு வயதான ஒருவர் முகத்தில் ஆயிரம் சுருக்கங்களுடன் வெயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். இதனை தூரத்தில் இருந்து சிவாஜியும், மேஜர் சுந்தர்ராஜனும் கவனித்திருக்கின்றனர்.

மகாத்மா காந்திக்கு தங்கத் தட்டில் பரிமாறிய கே.பி.சுந்தராம்பாள்.. பதிலுக்கு காந்திஜி செய்த தரமான சம்பவம்..

பின்னர் சிக்னல் விழ இவர்கள் கார் முன்னேறிப் போயிருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு சிவாஜி பாபு என்ற படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார். இந்தப் படம் மலையாளப் படமான ‘ஓடையில் நின்னு‘ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஏ.சி.திருலோகச் சந்தர் இப்படத்தினை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே‘ என்ற பாடல் காலத்தால் அழியாத காவியமாகும். கதைப்படி படத்தில் ஆரம்பத்தில் இளைஞனாக வரும் சிவாஜி பின்னர் வயது முதிர்ந்து எலும்புருக்கி நோயாள போல் ஆகி விடுவார்.

அப்படி இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது சிவாஜியின் நடிப்பினை பார்த்த மேஜர் சுந்தர்ராஜனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லையாம். ஆம்..! அவர்கள் இருவரும் ஒரு சிக்னலில் பார்த்த பிச்சைக் காரரின் முக பாவனைகளை அப்படியே தனது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அந்த நிலைமையில் இருந்தால் எப்படி இருக்குமோ அதை அப்படியே நடித்துக் காட்டினாராம் சிவாஜி.

இவ்வாறு தூரத்தில் கவனித்த ஒருவரின் முகபாவனைகளை பிற்காலத்தில் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்த சிவாஜியின் திறமையை பார்த்து வியந்து போயிருக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews