பாடகர் டிஎம்எஸ் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நடிகர் திலகம்… எப்படின்னு தெரியுமா?

பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தரராஜனின் ஆரம்ப நாட்கள் மிகவும் வறுமையானவை. சைக்கிளில் தான் செல்வாராம். அதுவரை பிரபலமாகாமல் தான் இருந்தாராம் டிஎம்எஸ்.

சினிமாவிலும் ஒரு சில வாய்ப்புத் தான் கிடைத்துள்ளது. 1954ல் ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான படம் தூக்கு தூக்கி. இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். அவருடன் இணைந்து லலிதா, பத்மினி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பாட டிம்எஸ்.சுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு முன்பு வரை எம்ஜிஆருக்கு டிஎம்எஸ்சும், சிவாஜிக்கு சிதம்பரம் எஸ்.ஜெயராமனும் தான் பாடினர். கூண்டுக்கிளி எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த படம். இதில் 4 பாடல்களை டிஎம்.எஸ். பாடினார். தூக்கு தூக்கி படத்தில் பாடவும் வாய்ப்பு கிடைத்தது. 1952ல் பராசக்தி படத்தில் தான் பாடகர் சிஎஸ்.ஜெயராமன் அறிமுகமானார். அவர் தூக்கு தூக்கிப் படத்தில் பாட அதிக சம்பளம் கேட்டாராம்.

அதனால் அந்த வாய்ப்பு டிஎம்.எஸ்.சுக்குப் போனதாம். அப்போது சிவாஜி எனக்கு சி.எஸ்.ஜெயராமன் தான் பாட வேண்டும் என்றாராம். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிஎம்எஸ். இந்தப் படத்தில் நான் பாட வேண்டும் என்று விதி இருந்தால் பாடுகிறேன் என்று படக்குழுவினரிடம் சொன்னாராம்.

Thooku Thookki
Thooku Thookki

இந்தப் படத்திற்காக 3 பாடல்களை இலவசமாகப் பாடுகிறேன். இதை சிவாஜியிடம் போட்டுக் காட்டுங்கள். அவர் சம்மதித்தால் பாடுகிறேன் என்றாராம். சிவாஜிக்கு இந்தப் பாடல் பிடிக்கவில்லை என்றால் நான் எனக்குத் தெரிந்த வேறு வேலையைப் பார்த்துக் கொள்கிறேன்.

அதன்பிறகு பாட மாட்டேன் என்றாராம். அதே போல சிவாஜியிடம் அந்தப் பாடல்கள் போட்டுக் காட்டப்பட்டது. அவருக்கும் டிஎம்எஸ்.சின் வாய்ஸ் பிடித்து விட்டது. இதைப் பாடியது யார் என கேட்க டிஎம்.எஸ்.சௌந்தரராஜன், மதுரை என்றாராம். ஆனால் சாதாரணமாகக் கேட்ட சிவாஜி, இந்தப் பாடலில் மெய்மறந்து போனாராம். தொடர்ந்து இன்னும் பல பாடல்களைப் பாடுங்கள் என்றாராம்.

அப்போது டிஎம்எஸ்.சை சிவாஜி அழைத்து இப்படி சொன்னாராம். ரொம்ப நல்லா பாடியிக்கீங்க. மற்ற பாடல்களையும் நீங்களே பாடுங்க என்றாராம். டிஎம்எஸ். 8 பாடல்களைப் பாடி அசத்தினார். இந்தப் படத்தில் அவர் பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்டாயின. அதனால் அவர் இந்த ஒரே படத்தில் பெயர் வாங்கினார்.

அதுவரை வாடகை சைக்கிளில் தான் டிஎம்எஸ். செல்வாராம். தயாரிப்பாளர்கள் அப்போது அவரைத் தேடி கார்களில் சென்று வாய்ப்பு கொடுத்தார்களாம். அந்த வகையில் என் வாழ்க்கையை ரெண்டாகப் பிரிக்கலாம். ஒன்று தூக்கு தூக்கிக்கு முன்… இன்னொன்று தூக்கு தூக்கிக்குப் பின் என்று ஒரு பேட்டியில் டிஎம்எஸ்.தெரிவித்துள்ளார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...