பக்திப் பாடல் ஆல்பத்தில் ஸ்ரீ காந்த் தேவா : வைரலாகும் வேளாங்கண்ணி மாதா பாடல்

தேனிசைத் தென்றல் தேவாவின் வாரிசான இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா தற்போது பக்தி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாகை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் புகழ் போற்றும் அந்த ஆல்பத்தில் அவரே நடித்துள்ளார். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ்சினிமாவில்  இசையமைப்பளாராக 2000-ம் ஆண்டு அறிமுகமானவர் தான் ஸ்ரீகாந்த் தேவா. அதிரடி இசை என்றாலே ஸ்ரீ காந்த தேவா தான் ஞாபகத்துக்கு வருவார். பிறகு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தனது இசையால் கவனிக்க வைத்து மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.

தொடர்ந்து ஏய், சிவகாசி போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். சில படங்களில் இவரே நடித்தும், பாடியும் உள்ளார்.

ஆனால் 2015-க்குப் பிறகு சரியான பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். இந்நிலையில் ‘கருவறை‘ என்ற ஆவணப் படத்திற்காக இசையமைத்ததற்காக 2021-ம் ஆண்டு தேசிய விருது பெற்று அனைவரையும் கவனிக்க வைத்து மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தாயராகிவிட்டார்.

அவ்வப்போது இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மறைந்த சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளியுமான சித்ராவை வைத்து இவர் இயக்கி, இசையமைத்த ஆல்பம் பாடல் அவரின் மறைவுக்குப்பின் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

”கண்கலங்கி தொண்டை அடைக்குது..” ஜிகர்தண்டா டபுள் X குறித்து உருகிய எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ்

இவ்வாறு இசைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஸ்ரீ காந்த்தேவா தற்போது நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மாதா பக்தி பாடலை இயக்கி, இசைத்து நடித்துள்ளார். வேளாங்கண்ணி பேராலயத்திலேயே எடுக்கப்பட்ட இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இவரது தந்தை தேவாவும் சிறந்த ஆன்மீகவாதி ஆவார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் தீவிர பக்தராக விளங்கும் தேவா ஓம்சக்தி பக்திப் பாடல்களுக்கு நிறைய இசையமைத்துள்ளார். தற்போது தந்தை வழியில் ஸ்ரீ காந்த் தேவாவும் வேளாங்கண்ணி மாதாவிற்காக இசையமைத்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதம் கடந்து இசையால் பக்தர்களை வசீகரிக்கும் ஸ்ரீ காந்த் தேவாவின் பாடலுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews