வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் முருகனின் வேல்

a757179805b7ecdc90276c61479b812e

இராமநாதபுரம் மாவட்டம் பெருவயலில் உள்ளது ரணபலி முருகன் கோவில். இந்த கோவிலை கட்டியது. தளவாய் வைரவன் சேர்வை இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் படைத்தளபதி ஆவார். இவர் கனவில் அருகில் உள்ள தேவிபட்டினம் கடலில் சிலையாக நான் இருக்கிறேன் என முருகன் உரைக்க அதன்படி தேவிபட்டினம் கடலில் இரண்டு நாட்கள் தேடி கடலுக்குள் ஒரு முருகன் சிலை கிடைத்துள்ளது.

அந்த முருகன் சிலையே இக்கோவிலில் உள்ளது. முருகன் சிலையோடு சேர்த்து ஒரு வேலும் கிடைத்துள்ளது. முதலில் சிலையும் வேலும் கிடைத்த உடன் தளபதி அதை வைத்து கோவில் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் கட்டுவதற்கு இடமில்லை உடனே சேதுபதி மன்னர் அருகே இருந்த பெருவயலில் தங்களுக்கு சொந்தமான இடத்தை கோவிலுக்கு கொடுத்தனர். அந்த இடத்தில்தான் மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

கடலில் கண்டெடுக்கப்பட்ட வேலில் முருகன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வேலிலும் முருகன் உருவம் இருக்காது. இந்த கோவிலுக்கு 60களில் வந்த வாரியார் ஸ்வாமிகள் இப்படி ஒரு வேலை எங்கும் கண்டதில்லை என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

இந்த வேல் இராமநாதபுரம் அரண்மனையிலேயே வைத்து பாதுகாக்கப்படும் வருடம் ஒரு முறை நடக்கும் மாசித்திருவிழா 10 நாட்கள் மட்டுமே இந்த வேலை நாம் கோவிலில் பார்க்கலாம் மற்ற நேரத்தில் பார்க்க முடியாது.

மனதில் உள்ள ரணத்தை அறுக்கும் முருகன் இவர் என்பதால் ரணபலி முருகன் என பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews