மும்பை அணிக்கு 4வது தோல்வி.. புள்ளிப் பட்டியலில் சென்னைக்கு இணையாக குஜராத்..!

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணிக்கு இது நான்காவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெற்றி பெற்ற குஜராத் அணி 10 புள்ளிகளுடன் சென்னை அணிக்கு இணையாக புள்ளி பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுப்மன் கில் 56 ரன்களும், டேவிட் மில்லர் 46 ரன்களும், அபிநவ் மனோகர் 42 ரன்களும், எடுத்தனர்.

MI vs GTஇதனை அடுத்து 208 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ரோஹித் சர்மா இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பிறகு இஷான் கிஷான், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்ததால் அடுத்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதும் இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் அபினவ் மனோகர் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் 4 தோல்விகளை அடைந்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் மும்பை அடுத்த சுற்று தகுதி வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன என்பதும் இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...