அப்பா பாகிஸ்தான், அம்மா திருச்சி.. நடிகை முமைத்கான் பற்றி பலருக்கும் தெரியாத பின்னணி..

பொதுவாக சினிமாக்களில், நடிகைகள் பிரபலமாக இருக்கும் அளவுக்கு பாடல்களில் கிளாமர் கதாபாத்திரத்தில் தோன்றி, சில காட்சிகளில் நடிப்பவர்களும் கூட அந்த அளவுக்கு பெயர் எடுப்பார்கள். அப்படி பாடல்களில் அதிகம் ஆடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகை முமைத் கான்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் உள்ள திரைப்படங்களில் ஏராளமான குத்து பாடலுக்கு நடனமாடிய இவர், கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி உள்ளார். இது தவிர ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் முமைத்கான் நடித்துள்ளார். சஞ்சய்தத் நடித்த ’முன்னாபாய் எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் தான் இவர் சிறப்பு தோற்றத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இந்த படம் தான் பின்னாளில் கமல்ஹாசன் நடித்த ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு பெரும்பாலும் ஒரு பாடலுக்கு நடனமாடும் கேரக்டரில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் முதன்முதலாக  மஜ்னு என்ற படத்தில் தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படத்தில் டேட்டிங் பாடலுக்கு நடனமாடி  சிறு கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு பொன்னியின் செல்வன், தலைநகரம், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

mumaith khan1

விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் இடம் பெற்ற  ’என் செல்லப்பேரு ஆப்பிள்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இதனை அடுத்து மதுரை வீரன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், மருதமலை, வில்லு போன்ற படங்களில் நடனம் ஆடினார். வில்லு திரைப்படத்தில் ’டாடி மம்மி வீட்டில் இல்லை’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இதனை அடுத்து பிரம்ம தேவா, கந்தசாமி போன்ற படங்களில் நடனமாடினார்.

கந்தசாமி திரைப்படத்தில் இடம் பெற்ற ’என் பேரு மீனா குமாரி’ என்ற பாடலை கேட்டால் கூட முதலில் முமைத்கான் தான் ஞாபகத்துக்கு வருவார் என்ற அளவுக்கு அவர் பெயர் எடுத்து கொடுத்தது. இதனை அடுத்து கற்றது களவு, பௌர்ணமி நகரம், சிறுத்தை, மம்பட்டியான், ஆர்யா சூர்யா போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்ததோடு ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த விஷயம், அதிக பரபரப்போடு பேசப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில ஆண்டுகளில் இவரது உடல் எடை கூடியதை எடுத்து அவருக்கு ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் தான் அவருக்கு பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசனில் இவர் ஒரு போட்டியாளராக களமிறங்கி, 49 நாட்கள் அந்த நிகழ்ச்சியில் அவர் தாக்குப் பிடித்திருந்தார்.

mumaith khan2

அதுமட்டுமின்றி மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். முமைத்கானின் தந்தை பாகிஸ்தானை சேர்ந்தவர். அவரது தாயார் தமிழ்நாட்டின் திருச்சி பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு அவர்  திடீரென அவருடைய அப்பார்ட்மெண்டில் படுக்கையில் இருந்து கீழே விழுந்ததாகவும் அதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

மூளையில் உள்ள அவரது நரம்புகள் சேதம் அடைந்ததால் 15 நாட்களுக்கு கோமா நிலையில் இருந்ததாகவும் அதன் பின்னர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு குணமானார் என்றும் கூறப்பட்டது. தற்போது முமைத்கான் முழு ஓய்வில் இருந்துவருகிறார் .

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...