இருந்தாலும் இப்படி ஒரு திமிரா…! எந்த விருதும் வேண்டாம்.. வெற்றி விழாவும் வேண்டாம்.. எம்.ஆர்.ராதாவின் சீரியஸ் பக்கங்கள்

சினிமாவில் சில படங்கள் நடித்து விட்டு இயக்குநர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திரையுலகமே வேண்டாமென்று நாடகங்களில் கவனம் செலுத்தியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 10 ஆண்டுகளாக நாடகத்தில் நடித்தவருக்கு அவரின் ரத்தக்கண்ணீர் மெகா ஹிட்டானது. அந்த நாடகத்தைப் படமாக்க, நேஷனல் பிக்சர்ஸ் முன்வந்தபோது, ஒருலட்சம் ரூபாய் சம்பளம் பெற்று நடித்தார்.

எம்.ஆர்.ராதாவின் சொந்த நாடகங்கள் யாவும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடனேயே தொடங்கப்பட்டன. எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள், முற்போக்கு சீர்திருத்தம் கொண்டனவாக இருந்ததால், நாடகங்கள் நடக்கும்போது, எதிரிகள் புகுந்து தொல்லைகள் தருவர். அவர்களைச் சமாளித்து வெல்வதற்கான, முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்துவிட்டே நாடகங்களைத் தொடங்குவார் எம்.ஆர்.ராதா.

தெய்வநாயகி என்ற பெயர் கொண்ட நடிகையை கே.ஆர்.விஜயாவாக மாற வழி சொன்னவரும் எம்.ஆர்.ராதாதான். இந்தப் பெயர், திரையுலகிற்கு ஒத்துவராது, விஜயா, கிஜயா என்று ஸ்டைலாகப் பெயரிட்டுக் கொள்ளுமாறு எம்.ஆர்.ராதா கூறியதாலேயே, பெயர் மாற்றிக்கொண்டார் கே.ஆர்.விஜயா.

சிவாஜியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போன இடத்தில் அடித்த லக்.. சிவக்குமார் சினிமாவின் மார்கண்டேயனாக மாறியது இப்படித்தான்

அதே போல் நாகேஷ் நடிக்க வந்த பொழுது, பலருடைய வசைமொழிகளுக்கும் ஆளாகி மனம்நொந்தபோது, அவரைத் தேற்றி ஊக்கப்படுத்தியவர் எம்.ஆர்.ராதாதான். நானும் ஒரு பெண் படத்தில், ரெங்காராவுடன் சேர்ந்து நடித்தார் எம்.ஆர்.ராதா. தினமும் லேட்டாக படப்பிடிப்புக்கு வந்த ரெங்காராவை சீனியர் நடிகர் என்று கூட பாராமல் ரெங்காராவ் காதுபடவே வேண்டுமென்றே மற்றொருவரிடம், ரெங்காராவின் தவறை எடுத்துரைத்தார். அதைக்கேட்ட ரெங்காராவ், மனம்வருந்தி, படப்பிடிப்பிற்கு உரியநேரத்தில் வந்து, நடித்துக்கொடுத்தார்.

நடிகர் அசோகன், தான் நாயகனாகிவிட்ட செய்தியைக் கூறி, எம்.ஆர்.ராதாவிடம் கூறி, ஆசி வாங்கியபோது, முதலில் வாழ்த்திய எம்.ஆர்.ராதா, ஆனாலும் அசோகன் நாயகனாக நீடித்து நிலைப்பது கஷ்டமென்றே கூறினார். அவர் வாக்கு அப்படியே பலித்தது.

பாரதிதாசன், சொந்தப்படம் தயாரிக்க விரும்பியபோது, “திரையுலகின் சூதுவாது தெரியாத நீங்கள் படமெடுக்க வேண்டாம். அதனால் ஏற்படும் பாதிப்புகளை உங்களால் தாங்கமுடியாது. எனவே, இலக்கியத்துறையில் மட்டும் கவனம்செலுத்துங்கள்” என்று எச்சரித்தார் எம்.ஆர்.ராதா.

அபார நினைவாற்றல் கொண்டவர் எம்.ஆர்.ராதா. தூங்குவதுபோன்ற பாவனையிலேயே வசனங்களை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தூங்கிவிட்டாரோ என்று வசனம் வாசிப்பவர் இடையில் நிறுத்தினால், வாசிப்பைத் தொடருமாறு கூறுவார் எம்.ஆர்.ராதா. வாசிப்பு முடிந்தவுடன், வசனங்களனைத்தும், அவர் மனதில் பதிவாகிவிடும்.

ரத்தக்கண்ணீர் படம் மெகாஹிட்டானாலும், ஒருகட்டத்தில், அவர் நாடகங்கள் நஷ்டமடைந்தன. பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, தன் நண்பரான வி.கே.ராமசாமியை அணுகி, படவாய்ப்பு தருமாறு கேட்டார்.

வி.கே.ராமசாமி முதலில் தயங்கினாலும், பிறகு ஒப்புக்கொண்டார். வி.கே.ராமசாமியின் கதையில், வி.கே.ராமசாமி−ஏ.பி.நாகராஜன் தயாரிப்பில், கே.சோமு இயக்கத்தில் வெளியான “நல்ல இடத்துச் சம்பந்தம்” படத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். 1958ஆம் ஆண்டில் வெளியான இப்படம்தான், தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் மத்தியில், எம்.ஆர்.ராதாவின் இமேஜை மாற்றி, அவருடைய திரையுலக வளர்ச்சிக்குத் திருப்பு முனையானது.

தான் நடித்த 125 திரைப்படங்களிலும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றி விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகர் எம்.ஆர்.ராதா, எப்படத்தின் வெற்றிவிழாவிலும் கலந்துகொண்டதில்லை. அதேபோல் 1966 ஆம்ஆண்டு, தமிழக அரசு, சிறந்த நடிகருக்கான விருதை, தனக்கு வழங்க முன்வந்தபோது, அதையும் ஏற்க மறுத்துவிட்டார் இந்த நடிக வேள். எதையும் வெளிப்படையாக பேசி, தனது கூரிய கருத்துக்களால் மக்களிடம் அறியாமையை விரட்டிய பெருமை எம்.ஆர்.ராதாவுக்குச் சேரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...