6 மாதத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை இழப்பு.. ஜூனில் மட்டும் 41,000 பேர்.. பரிதாப நிலையில் ஐடி ஊழியர்கள்..!

இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மற்றும் 41000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவரும் நிலையில் இன்னொரு பக்கம் வேலை கிடைத்தவர்களுக்கு கூட வேலையை தக்க வைத்துக் கொள்வதில் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. திடீரென பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் குறைப்பு என்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் கடந்த ஆறு மாதங்களில் ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பேடிஎம், பைஜூ, மெட்டா, ஆப்பிள், டெஸ்லா, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாத வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை இழந்து உள்ளனர் என்றும் குறிப்பாக ஜூன் மாதம் மட்டும் 41 ஆயிரம் பேர் இழந்துள்ளதாகவும் டைம்ஸ் நவ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

layoff1

சமீப காலத்தில் கூகுள், மைக்ரோசாப்ட், ஓலா, எஸ் பேங்க், உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவு வேலை நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் கிளவுட் யூனிட்டில் 100 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது என்றும் அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1500 ஊழியர்களை வேலை விட்டு நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒரு சிலர் ஒன்றாக இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வருவதாகவும் இதனால் இந்தியாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரிய நிறுவனங்களில் வேலை செய்தாலும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறப்படும் நிலையில் சொந்த தொழில் தொடங்குவது மட்டுமே தங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று பல இளைஞர்கள் விழிப்புணர்வை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...