நடிகை அதுல்யா ரவி ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. கோவையில் வேலைக்கார பெண் திருடியது எதை தெரியுமா?

கோவை: நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை நடிகை அதுல்யா ரவியின் சொந்த ஊர் கோவையாகும். கோவையில் உள்ள அதுல்யா ரவி வீட்டில் பணத்தை திருடிய புகாரில் வேலைக்கார பெண் தோழியுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை அதுல்யா ரவி (வயது 29). இவர் அதன் பின்னர் ஏமாளி, சுட்டுப்பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ் , எண்ணி துணிக, கடாவர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நடிகை அதுல்யா ரவியின் சொந்த ஊர் கோவை ஆகும். அதுல்யா தற்போது கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அதுல்யா வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ,2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச்சென்றுவிட்டார்களாம்.

இதையடுத்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி(46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதையடுத்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில். செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ,1,500 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் பாஸ்போர்ட்டை மீட்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews