குரங்குடன் மகிழ்ச்சியாக விளையாடும் சமந்தா!

சில மாதங்களாக படங்களில் இருந்து ஓய்வு எடுத்து வந்த நடிகை சமந்தா, தற்போது தனக்கு தேவையான விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். அவர் பெரும்பாலும் தன் நேரத்தை மகிழ்ச்சியாக இயற்கையுடன் செலவிட்டு வருகிறார். சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் ரசிகர்களுடன் நெருங்கி பழகி அவர்களுக்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்தோனேசியாவின் பாலியில் உள்ள புகழ்பெற்ற குரங்கு வனப்பகுதிக்கு சமந்தாவும் அவரது தோழியும் சென்றுள்ளனர். அங்கு சென்ற போது சமந்தா “ஸ்பாட் தி குரங்கு” என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். அவரும் அவரது அவரது நெருங்கிய தோழியும் குரங்குடன் எடுத்த செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார்கள்.

அதில் அந்த குரங்கு சமந்தாவின் மடியில் இருபது போன்றும், அவரது மேல இருப்பது போலவும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அந்த குரங்காக பிறந்திருக்க கூடாதா என ஏங்கி வருகின்றனர், மேலும் சில ரசிகர்கள் உங்களது மகிழ்ச்சியே எங்களுக்கு மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சமந்தா தனது அனைத்து கவலைகளையும் மறந்து முகத்தில் மிகவும் மகிழ்ச்சியுடனும், புது பொலிவுடன் இருந்தது அவரது ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

samantha monkey selfie

சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் அமெரிக்கா மற்றும் சில வெளிநாடுகளில் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். அவர் தனது மருத்துவப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கோயில்கள், தியான மையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

சமந்தாவின் நடிப்பில் அடித்து வரவிருக்கும் படங்களில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘குஷி’, ராஜ் மற்றும் டிகே இயக்கிய ‘சிட்டாடல்’ மற்றும் வருண் தவான் மற்றும் அவரது ஆங்கில திரைப்படமான ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...