இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.!! பிரபல வீராங்கனை ஓய்வு;

நாளுக்கு நாள் இந்திய அணியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையானது சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஒருவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதன்படி இந்திய கிரிக்கெட்  மகளிர் அணியின் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழிநடத்திச் சென்றது எனக்கு பெருமை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலிராஜ் 7805 ரன்கள் எடுத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 699 ரன்களும் எடுத்துள்ளார்.

89 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிதாலிராஜ் 2364 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார் .இவரின் இத்தனை முடிவு இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.