போன் பண்ணா ஹலோ சொல்ல மாட்டாராம் யோகிபாபு.. இது என்ன புது பழக்கமா இருக்கு? மிர்ச்சி சிவா சொன்ன சீக்ரெட்!

Unknown நம்பரில் இருந்து போன் வந்தால் ஹலோ சொல்வது தான் வழக்கம். ஆனால் இந்த விஷயத்தில் காமெடி நடிகர் யோகிபாபு கொஞ்சம் மாற்றிச் சொல்வாராம். கவுண்டமணி, செந்தில், விவேக் வடிவேலு, சந்தானம், சூரி என காமெடியில் கொடி கட்டிப் பறந்த நடிகர்களின் வரிசையில் தற்போது யோகி பாபுவும் இணைந்துள்ளார்.

லொள்ளு சபாவில் ஆரம்பித்த இவரது காமெடிப் பயணம் இன்று இவர் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவிற்கு நடித்து வருகிறார். வருடத்திற்கு தோராயமாக 10 படங்களிலாவது நடிக்கும் யோகிபாபுவின் கால்ஷீட் டைரி எப்போதும் நிரம்பி வழியும். முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் பல இலட்சங்களைத் தாண்டுகிறதாம்.

தீவிர முருக பக்தரான யோகிபாபு தல தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது நடிகரும், தொகுப்பாளருமான மிர்ச்சி சிவா யோகிபாபு பற்றிய சுவராஸ்ய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Siva

அதாவது யோகிபாபுவும், மிர்ச்சி சிவாவும் நெருங்கிய நண்பர்கள். தான் அவருக்கு போன் செய்தால் எடுத்தவுடன் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என பாட்டுப் பாடித்தான் ஹலோ சொல்வாராம். மேலும் பாட்டுப் பாடி இணைப்புத் துண்டித்து விடுவாராம். மீண்டும் போன் செய்தால் மறுபடியும் பாட்டுப் பாடித்தான் பேச ஆரம்பிப்பாராம்.

காதலனை கரம்பிடித்த அமலாபால் : இவர்தான் மாப்பிள்ளையா? வாழ்த்திய திரையுலகம்

அவ்வளவு இசை ரசிகர் எனவும், தான் கீபோர்டு கற்றுக் கொள்ளும் போது யோகிபாபு பாடி அனுப்ப மிர்ச்சி சிவா கீபோர்டில் இசையமைத்துக் கொடுப்பாராம். இவ்வாறு சிவா கூறியுள்ளார். ஏற்கனவே காமெடியில் ரசிகர்கள் வயிற்றைப் பதம்பார்க்கும் யோகி பாபு இவ்வளவு நல்ல பாடகராகக் கூட இருப்பாரா என அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

காமெடி வேடங்களில் கலக்கிவரும் யோகிபாபுவை கதையின் நாயகனாக ஏற்று நடிக்க வைத்து பெயர் வாங்கிக் கொடுத்த படம் மண்டேலா. நேரடியாக விஜய் டிவியில் வெளியான இந்தப்படம் சிறந்த வசனங்களால் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு தேசிய விருது வரை கொண்டு சேர்த்து மட்டுமல்லாமல் யோகிபாபுவின் திறமையை சினிமா உலகம் அறியச் செய்தது. மேலும் கூர்க்கா, லக்கி மேன் போன்ற படங்களிலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பார் யோகிபாபு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...