காதலனை கரம்பிடித்த அமலாபால் : இவர்தான் மாப்பிள்ளையா? வாழ்த்திய திரையுலகம்

தமிழில் இயக்குநர் சாமியின் சிந்துசமவெளி படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை அமலாபால். கேரளத்து வரவான இவர் தமிழில் அறிமுகமாகும் முன்பே மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து விட்டார்.

முதல்படமான சிந்துசமவெளியில் மாமனாரை நேசிக்கும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து அதிர வைத்தவர். நடிகர் ஹரீஷ் கல்யாணும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார். முறையற்ற உறவை இந்தப்படம் ஊக்குவிப்பதாக எழுந்த சர்ச்சைகளாலும், விமர்சனங்களாலும் கவனிக்க வைத்தவர்.

அதன்பின் இயக்குநர் பிரபுசாலமன் உருவாக்கத்தில் வந்த மைனா படம் அமலாபாலை சினிமாவின் உச்சத்தில் கொண்டு போக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். பெண்ணியவாதியாக இவர் நடித்த ஆடை திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் வெளியாகி பரவலான வெற்றியையும் பெற்றது.

மைனா பட வெற்றியால் பல்வேறு விருதுகளையும் பெற்று தலைவா படத்தில் தளபதி விஜய் வரை ஜோடி சேர்ந்து நடித்த அமலாபால் சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிப்பார். தலைவா பட ஷூட்டிங் பணிகளின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் நிலைக்கவில்லை.

amala

பெற்ற மகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘பேரன்பு’ படம் | அதான் இயக்குநர் ராமின் டச்

சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்த அமலாபால்- இயக்குநர் விஜய் தம்பதி 2017-ல் விவாகரத்து பெற்றனர். இயக்குநர் ஏ.எல். விஜய்யும் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் இருவரும் தனித்தனியே பிரிந்து தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி அவரவர் பணியைச் செய்து வந்தனர்.

இதனிடையே அமலாபால் தனது நண்பராண ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் நேற்று (நவ.5)-ல் தனது காதலரை மண வாழ்வில் கரம் பிடித்தார். கொச்சியில் நடந்த இவர்களது திருமண புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்த அமலாபால் இரண்டு மனங்கள் கைகோர்த்து இனி வாழ்நாள் முழுவதும் பயணிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அமலாபால்-ஜெகத் தேசாய் திருமணத்திற்கு சோஷியல் மீடியாக்களில் திரைப் பிரபலங்கள், இரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews