இன்றைய போட்டி மும்பை vs பெங்களூரு.. வெல்லும் அணிக்கு ஒரு ஆச்சரியம்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு புள்ளி பட்டியலில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

ஐபிஎல் தொடரின் 54ஆவது போட்டி இன்று மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர்.

இன்றைய போட்டியில் விளையாடும் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளுமே புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி 12 புள்ளிகளுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி புள்ளி பட்டியலில் மிகவும் மோசமாக எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் அந்த அணி வென்றுவிட்டால் ஐந்து இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

mi vs rcb

அதேபோல் பெங்களூர் அணி தற்போது 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் நிலையில் அந்த அணி வென்று விட்டால் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள் இதோ:

மும்பை: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், வதேரா, டேவிட், ஜோர்டான், பெஹண்ட்ரிப், கார்த்திகேய, மாத்வால்,
பெங்களூரு: டூபிளஸ்சிஸ், விராத் கோஹ்லி, ரவாத், மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹாசில்வுட், சிராஜ், வைஷாக், ஹர்ஷல்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.