10 நாள் தான் அனுமதி….. கறாராக சொன்ன பாங்காக் அரசு….. எம்ஜிஆரின் உயர்ந்த செயலால் வியந்த பாங்காக்…..!!

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் சினிமா வாழ்வில் அவரது குணத்தை போற்றும் விதமாக நடந்த சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சினிமா துறையில் மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கியவர் என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் என்று மக்களால் அறியப்படும் இவர் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.  சினிமாவில் அவருடைய சண்டைக் காட்சிகளுக்கும், நடனத்திற்கும், அவரது நடிப்பு திறமைக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதைப் போன்று குணத்திலும் எம்.ஜி.ஆரைப் போன்று சிறந்தவர்கள் உண்டா என்று கேட்கும் விதமாக பல சம்பவங்கள் அவரது வாழ்வில் நடந்துள்ளது.

mgr 29

பாங்காக்கில் எம்ஜிஆர் 

பொதுவாகவே எம்ஜிஆருக்கு தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு இந்தியாவிற்குள் தான் இருக்க வேண்டும் என்பது விருப்பம். வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துவது எம்ஜிஆருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. ஆனால் 1973ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக எம்ஜிஆர் பாங்காக்கிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அங்கு படப்பிடிப்பிற்கு 15 நாட்கள் அனுமதி கேட்டபோது அங்குள்ள அரசாங்கம் பத்து நாட்கள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.

பாங்காக்

பாங்காக் நடிகரின் மரணம்

இதனால் 15 நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய படப்பிடிப்புக் காட்சிகளை 10 நாளில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பட குழு தள்ளப்பட்டது. இந்நிலையில் பாங்காக்கில் உள்ள பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட சண்டை காட்சியில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி நடித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக கீழே விழுந்து இறந்து விட்டார். இது பற்றிய தகவல் அறிந்த எம்ஜிஆர் மதியம் ஒரு மணி அளவில் படப்பிடிப்பை நிறுத்த கூறிவிட்டு தனது குழுவுடன் அந்த நடிகரின் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வந்தார்.

இதையும் வாசிக்க: எம்ஜிஆருக்கு நிகர் இவர் மட்டும்தான்…. சோ ராமசாமி கூறிய அந்த நடிகர் யார் தெரியுமா?

15410

பாங்காக் அரசின் அனுமதி 

இதற்கு அடுத்த நாள் பாங்காக் அரசு  நடிகர் எம்ஜிஆர் அவருக்கு படப்பிடிப்பிற்கு 15 நாட்கள் கால அவகாசம் கேட்டபோது பத்து நாட்கள் மட்டுமே அரசு வழங்கியது. ஆனால் அப்போதும் ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எங்கள் நாட்டின் நடிகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பட குழுவுடன் அவர் வந்திருந்தார். அவரது இந்த நல்ல குணத்தை  பாராட்டாமல் இருக்க முடியாது. எம்ஜிஆர் அவர்களின் படக்குழு  கேட்டது போல் 15 நாள் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளிக்கிறது என்று கூறியுள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...