மெகா ஃபேமிலி கொண்டாடிய பொங்கல் பண்டிகையை பார்த்தீங்களா!.. ஒட்டுமொத்த டோலிவுட்டே இருக்கே!..

தெலுங்கு சினிமாவில் மெகா குடும்பம் என்றால் அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் தான். ஒட்டுமொத்த குடும்பத்துடன் சங்கராந்தி பண்டிகையை மெகா ஸ்டார் கொண்டாடிய பிரம்மாண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண், உறவினர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி என ஒட்டு மொத்த தெலுங்கு திரை உலகமே ஒன்றாக கூடி சங்கராந்தி பண்டிகையை கொண்டாடியது போல வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது டோலிவுட் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது.

GD5Ls 9XAAA3FUC

மெகா ஃபேமிலியின் சங்கராந்தி கொண்டாட்டம்:

கண்ணு பட்டுட போகுது திருஷ்டி சுத்தி போடுங்க என ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர். சங்கராந்தி முன்னிட்டு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தின் அறிமுக டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

விஷ்வம்பரா எனும் தலைப்பில் டைம் டிராவல் எல்லாம் செய்துக் கொண்டு சொர்க்கத்தில் இருந்து ஒரு பொருள் பூமிக்கு வந்து விழுவது போன்ற டீசரை பார்க்கும் போதே படம் பிரம்மாண்டமாக மிரட்டுகிறதே என்றும் இந்த படம் நிச்சயம் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில், தனது மகன் ராம் சரணை போல பெரிய படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தற்போது சிரஞ்சீவியும் இறங்கியுள்ளார்.

ராம்சரண் மற்றும் உபசனாவின் குழந்தையின் முகத்தை மட்டும் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் மறைத்துள்ளனர்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது பெரிய குடும்பத்துக்கு ரசிகர்கள் சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராம் சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்துடன் இந்த ஆண்டு வெயிட்டு காட்ட காத்திருக்கிறார்.

அதே போல புஷ்பா 2 படத்துடன் அல்லு அர்ஜுனும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைக் கொடுக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.