ஜோதிடம்

மீனம் வைகாசி மாத ராசி பலன் 2024!

மீன ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு யோகமும் அனுகூலமும் அதிக அளவில் உண்டு. உடல் உஷ்ணம் காரணமாக குழந்தைகளுக்கு உடல் தொந்தரவுகள் ஏற்படும்.

குழந்தை பாக்கியத்துக்குக் காத்திருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். குடும்ப வாழ்க்கையில் மனக் கஷ்டங்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் சென்றால் மட்டுமே பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

சந்திரனின் ஸ்தானமாக இருப்பதால் உங்களுக்கு கோபம் அதிகமாகும்; வெளிப்படும் பேச்சுகள் ஆக்ரோஷமானதாகவே இருக்கும். 6 ஆம் இடத்தில் இருக்கும் சூர்ய பகவானின் சஞ்சாரம் 3 ஆம் இடத்தில் உள்ளது. சூர்ய பகவானின் இட அமைவால் செய்யக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் முறையாகத் திட்டம் தீட்டிச் செயல்படுத்தினால் வெற்றி இலக்கினை அடைய முடியும்.

நிதானமாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்குச் சாதகமானதாகவும் ஆதாயப் பலன்களைக் கொடுப்பதாகவும் இருக்கும். பயணங்களில் மிகப் பெரிய வெற்றி உண்டு.

வாழ்க்கைத் துணை மற்றும் உடன் பிறப்புகளால் உங்களுக்கு அனுகூலமான விஷயங்கள் நடக்கப் பெறும். 2 ஆம் இடத்தில் குரு பகவானும் – ராகு பகவானும் கூட்டணி அமைத்து சஞ்சாரம் செய்கின்றனர்.

பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை; பேசுவதற்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பேசுதல் வேண்டும். ஏழரைச் சனியின் தாக்கத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் பணத்தினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

முடிந்தளவு அபாயம் தரும் முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள். குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார வரவு சிறப்பாக இருந்தாலும் வீண் விரயச் செலவுகளால் கையில் இருக்கும் பணம் கரைந்து போகும்.

தான, தர்மங்களைச் செய்யுங்கள். விஜயேந்திரர் வழிபாடு வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருளும்.

Published by
Gayathri A

Recent Posts