சிவாஜி கணேசன் வீட்டுக்கு மருமகனாகும் மார்க் ஆண்டனி டைரக்டர்?

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி களிப்பில் இருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக கிசுகிசுக்கப் படுகிறது. அதுவேறு ஒன்றுமில்லை அவருடைய திருமணம்தான்.

அதுவும் நடிப்புக்கு இலக்கணமாக இருந்த சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டிற்கு மருமகன் ஆகபோகிறார் என்று தகவல்கள் கூறுகிறது. சிவாஜி கணேசனின் மகனான, பிரபுவிற்கு இரு பிள்ளைகள். அதில் ஒருவர் மகன் விக்ரம் பிரபு. மற்றொருவர் மகள் ஐஸ்வர்யா.

ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொள்ளப்போவது, பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை தானாம். ஐஸ்வர்யா ஏற்கனவே அவர்களின் குடும்ப உறவினரான குணால் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கிறார்.

பின் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் விவகாரத்து பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா. அதன் பின் தன்னுடைய பெற்றோர்கள் உடனே ஐஸ்வர்யா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருக்கிறது.

இருவீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டதால், டிசம்பர் 15ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதுவரை பிரபு தரப்பிலோ அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பிலோ ஆதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன், ஜீவி பிரகாஷை ஹீரோவாக வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படமே பயங்கரமான சர்சைகளுக்கு உள்ளானது. எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் போனது.

இதற்கிடையில் அஜித் நடித்து ஹிட்டான நேர் கொண்டபார்வை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.. பின்னர் சிம்பு, தமன்னா நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை இயக்கினார். அதுவும் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

பிரபுதேவாவை வைத்து பஹிரா என்ற த்ரில்லர் படத்தை எடுத்தார் அதுவும் வெற்றி பெறவில்லை. அதன் பின் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி படமே சமீபத்தில் சூப்பர் ஹிட்டானது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி மூலம் இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் AK-63 படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.