தனக்கு பிரசவம் நடந்ததையே ஷூட் செய்து.. படத்தில் பயன்படுத்தி பரபரப்பை உண்டு பண்ணிய நடிகை..

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்வேதா மேனன். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். அதே போல, நிறைய டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார் ஸ்வேதா மேனன்.

இவர் ஜோதிகா, தபு நடித்த ’சினேகிதியே’என்ற திரைப்படத்தில் தான் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் ஒரு  போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பிறகு அவர்  கார்த்திக் நடித்த ‘சந்தித்த வேளை’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் ’சாது மிரண்டால்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதனை அடுத்து ’நான் அவன் இல்லை’  ’துணை முதல்வர்’ ’இணையதளம்’  போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார்.

swetha menon1

கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து 2006 ஆம் வரை நான்கு வருடங்கள் அவர் பல ஹிந்தி படங்களில் நடித்திருந்ததுடன் பாலிவுட்டில் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் பாலிவுட் மாடல் பாபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு சில ஆண்டுகளில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்

அதன் பிறகு அவர் 2011 ஆம் ஆண்டு  கேரளாவை சேர்ந்த ஸ்ரீ வால்சன் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பெற்றெடுக்கும் போது தான் அவர் நேரடியாக தனது பிரசவத்தை வீடியோ எடுக்க அனுமதித்தார். அந்த வீடியோவை தான் முக்கிய வேடத்தில் நடித்த ’களிமண்ணு’ என்ற திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்தார். கடந்த 2013ம் ஆண்டு வெளியான இந்த மலையாள படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

எந்த நடிகையும் செய்ய துணியாத பிரசவ நிகழ்ச்சியை வீடியோ எடுக்க அனுமதிப்பதும் அதை திரைப்படத்திற்கு பயன்படுத்தியதும் மற்ற நடிகை நடிகர்களை ஆச்சரியப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  மேலும் அவர் திரைப்படங்களில் மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் இருந்து பல முன்னணி நடிகைகளுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார்.

பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன், தற்போது கூட மலையாளத்தின் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews