உதடுகளை பராமரிக்கும் சூப்பரான லிப் பாம்கள்! இனி வீட்டிலேயே செய்யலாம்…!!!

சரும பராமரிப்பு என்பது சிலருக்கு சிக்கல் நிறைந்த ஒன்றாக உள்ளது. என்ன தான் பார்த்து பார்த்து சரும பராமரிப்பிற்கான பொருட்களை வாங்கினாலும் அதில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு ஒத்துக் கொள்வதே இல்லை. பக்க விளைவுகள் வரத் தொடங்கி விடுகிறது. எனவே எந்த விதமான சரும பராமரிப்பாக இருந்தாலும் கூடுமானவரை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்து கொள்வது சிறந்தது.

lipbalm 1

சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகளை பராமரிப்பது தான். காரணம் உதடு சருமத்திலேயே மிகவும் மென்மையானது. மேலும் உதடுகளால் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள தேவையான எண்ணெய் சத்துக்களை உற்பத்தி செய்யும் திறன் கிடையாது சூரியனிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தன்மையும் கிடையாது. எனவே உதடு பராமரிப்பில் நாம் எப்பொழுதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முகத்தில் மற்ற பகுதிகளைப் போலத்தான் உதடுகளும் மாசினாலும், சூரிய ஒளியினாலும், பருவநிலை மாற்றத்தாலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பருவநிலை மாற்றத்தால் உதடுகளில் வெடிப்பு, விரிசல், வறட்சி ஆகியவை ஏற்படும். உணவு உண்பதற்கு பேசுவதற்கு என அனைத்திற்கும் உதவி புரியும் உதடுகளை பராமரிப்பது அவசியம். உதடுகளில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அவ்வபோது லிப் பாம்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது இந்த லிப் பாம்களை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளலாம்.

lips

சில எளிய லிப் பாம்களை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

ஜோரான ஜோஜோபா எண்ணெய்… சருமம், கூந்தல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு!

1. சியா பட்டர் லிப் பாம்:

சியா பட்டர் உதடுகள் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் இதில் நாம் சேர்க்கும் விட்டமின் ஈ ஆனது உதடுகள் பராமரிப்பில் கூடுதலாக நன்மை புரிகிறது. இது உதடுகளை வறட்சி அடைய விடாமல் தடுக்கும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

சியா பட்டர் லிப் பாம் செய்ய தேவையான பொருட்கள்:

lipbalm 612x612 1

சியா பட்டர்  – 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 2

தேன் – 1 ஸ்பூன்

செய்முறை:

சியா பட்டரை நன்கு துருவி ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதனுள் ஷியா பட்டர் துருவிய கிண்ணத்தை வைக்கவும்.

சியா பட்டர் பாதி உருகியதும் அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

அனைத்தும் ஒன்றாய் கலந்ததும் விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள மருந்தினை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.

இப்பொழுது கிண்ணத்தை வெளியே எடுத்து தனியே ஆற விட்டு விடவும்.

நன்கு ஆறிய பின் ஒரு சிறிய கொள்கலனில் ஊற்றி இறுகியதும் லிப் பாமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. நிறமூட்டப்பட்ட நெய் லிப் பாம்:

இந்த லிப்பாமானது உதடுகளை பராமரிப்பது மட்டுமின்றி இயற்கையான பிங்க் நிறத்துடனும் வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இதில் பீட்ரூட் சேர்ப்பதால் இயற்கையான பிங்க் நிறம் கிடைக்கின்றது. இந்த லிப் பாம் தினமும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற சிறந்த இயற்கை முறையில் செய்யப்பட்ட லிப் பாம் ஆகும்.

istockphoto 184122230 612x612 1

நெய் லிப் பாம் செய்ய தேவையான பொருட்கள்:

பீட்ரூட் சாறு – அரை கப்

நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

அரை கப் பீட்ரூட் சாற்றினை நன்கு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் உருகிய நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது லிப் பாம் வைக்கும் கொள்கலனில் இந்த கலவையை ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும்.

குளிர்சாதன பெட்டியில் உள்ள இந்த கலவை சற்று இறுகி கெட்டியாக மாறியதும் லிப் பாமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...