விளையாட்டு

ஐபிஎல் தொடருக்கும், டி 20 உலக கோப்பை தொடருக்கும் இடையே இருந்த சூப்பரான வித்தியாசம்.. இத கவனிச்சீங்களா..

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வரும், போகும் அணி எல்லாம் 200 ரன்களை மிக அசால்டாக கடந்திருந்தது. அதிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்ததுடன் மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 287 ரன்களை தொட்டு வரலாறு படைத்திருந்தது.

இப்படி பல முக்கியமான சாதனைகள் ஐபிஎல் தொடரில் ரன்கள் அடிப்படையில் அரங்கேறி இருந்த நிலையில் இதற்கு நேர்மாறான விஷயங்கள் தான் டி20 உலக கோப்பைத் தொடரில் நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மைதானங்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிக்கும் மிக புதிதாக இருக்கும் சூழலில் இங்கே 100 ரன்களைக் கடப்பதே சவாலான விஷயம்.

இந்திய அணி மூன்று போட்டிகள் ஆடி முடித்திருந்த நிலையில் இதில் எதிரணியை 100 முதல் 110 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினாலும் இலக்கை எட்டவே சிரமப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல பெரிய அணிகளுக்கும் இதே நிலைமைதான் அமெரிக்க மைதானங்களில் தொடர்ந்த சூழலில், சி குரூப்பில் இடம் பெற்றுள்ள உகாண்டா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 39 ரன்களிலும், நியூசிலாந்துக்கு எதிராக 40 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்திருந்தது.

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியிருந்த நிலையில் இந்த தொடர்பு இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்துமே இப்படி குறைந்த ரன்கள் போட்டி தான் அதிகம் அமைந்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை இடையே இருக்கும் வித்தியாசத்தை தற்போது பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் வரை அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, ஆர்சிபி எடுத்த 263 ரன்கள் தான். அந்த ஸ்கோர் இந்த ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கடக்கப்பட்டு புதிய மைல்கல் உருவாகியிருந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் அதற்கு அப்படியே நேர்மாறாக குறைந்த ஸ்கோரில் புதிய இலக்கையும் உகாண்டா உள்ளிட்ட அணிகள் எட்டியுள்ளது.

ஒரு பக்கம் அதிகபட்ச ஸ்கோர் சாதனை முறியடிக்கப்பட இன்னொரு பக்கம் குறைந்தபட்ச ஸ்கோர் முறியடிக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ajith V

Recent Posts