மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறை

தஞ்சை மாவட்டம் திருவையாறு புகழ்பெற்ற ஊர். ஐயாரப்பர் திருக்கோவில் அருகே, தியாகராஜர் ஜீவசமாதி என புகழ்பெற்றது இந்த ஊர்.

தை மாதம் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பிரபலமானவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஊரில் உள்ளது பிரபலமான புஷ்ப மண்டப படித்துறை. இதன் அருகே நீண்ட காவிரி ஆறு ஓடுவதால் இந்த இடத்தை பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.

இங்கு பித்ரு காரியங்களும் செய்யப்படும். இந்த இடத்தில் இன்று கொரோனா தடை காரணமாக பரபரப்பாக இயங்கி வரும் இந்த இடம் பரபரப்பின்றி காணப்படுகிறது.

மக்கள் நடமாட்டம் இன்றி இந்த இடம் வெறிச்சோடி காணப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.